பெரும்பாலான இளைஞர்கள் இன்று அதிகம் அவதிப்படும் தொந்தரவாக காது வலி உள்ளது. அதிகநேரம் தொலைபேசியில் பேசுவது, பாட்டு கேட்பது, எந்நேரமும் காதில் இயர் போன், ஹெட்செட் என ஏதேனும் ஒன்றை மாட்டிக் கொண்டு இருப்பதாலும் இன்று அதிகமானவர்கள் காது வலியால் அவதிப்படுகின்றனர். இதனால் காதில் இருக்கும் மென்மையான எலும்புகளும், நரம்புகளும் கூட பாதிக்கப்படுகிறது. இவற்றிலிருந்து வெளிவர சில பாட்டி வைத்திய முறைகளை இந்தப் பதிவில் தெரிந்துக் கொண்டாலும் அதிகநேரம் மின்சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும்.
இவற்றை கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதால் காதில் வரும் சீழ் வருதல், வலி அடைப்பு ஏற்படுவது, தொடர்ந்து அல்லது அவ்வப்பொழுது சத்தம்/இரைச்சல் ஏற்படுவது, மந்தம், கிருமிகளால் பாதிக்கப்படுவது என பல தொந்தரவுகளும் உண்டாகிறது. இவற்றிலிருந்து வெளிவர சில எளிய வழிமுறைகள்
காது இரைச்சல்
இரண்டு மூன்று நாட்கள் இரவு பூண்டை காதில் வைத்துக்கொண்டு தூங்கி காலையில் எடுக்க காதில் ஏற்படும் காது இரைச்சல் இரண்டு மூன்று நாட்களில் தீரும்.
காதில் வலி
காதில் வலி அதிகமாக இருந்தால் அதற்கு எலுமிச்சை சாறு சிறந்த பலனை அளிக்கிறது. எலுமிச்சை சாறை எடுத்து மூன்று அல்லது நான்கு துளிகள் காதில் விட வலி விரைவில் தீரும்.
துளசி, மணத்தக்காளி கீரையும் இதற்கு பயனளிக்கும். துளசி, மணத்தக்காளி இலைகளை சம அளவு எடுத்து இடித்து சாறு எடுத்து இரண்டு மூன்று துளிகள் காதில் விட வலி தீரும்.
காதடைப்பு கட்டிகள்
தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட காதில் ஏற்படும் அடைப்பு, கட்டிகள் நீங்கும்.
சீழ் வருவது நிற்க
தைவேளை இலைசாறை காதின் ஓரங்களில் தடவி விட காதில் சீழ் வருவது நிற்கும்.
கிருமி தொந்தரவு
காதில் ஏற்படும் கிருமிகள் தொந்தரவுகளுக்கு வசம்பு, பூண்டு, மணத்தக்காளி இலை சாறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விட மறையும்.
காது குத்தல்
பெருங்கயத்தை சிறிது பொறித்து தேங்காய் எண்ணெய்யில் சிறிது நேரம் ஊறவைத்து அந்த எண்ணெய்யை எடுத்து ஓரிரு துளிகள் காதில் விட காது குத்தல் தீரும்.
காது மந்தம்
திருநீற்றுப் பச்சிலையை அடுப்பில் வாட்டி பிழிந்து சாறு எடுத்து அதில் இரண்டொரு துளி காதில் விட காது மந்தம் நீங்கும்.