நீரிழிவு நோய் அறிகுறிகள்

நீரிழிவு நோய் வர பல காரணங்கள் உண்டு. அவற்றின் உடல் பருமன் மிக முக்கியமான காரணமாக உள்ளது. இன்றைய உணவு முறைகளும், சீரான ஆரோக்கிய உணவு பழக்கமின்மையும் நீரிழிவு ஏற்பட மிக முக்கிய காரணமாக உள்ளது. மேலும் முறையற்ற தூக்கம், உணவு பழக்கம், உடற் பயிற்சியின்மையும் சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இவை பெரியவர்களை மட்டுமல்லாமல் இளம் வயதினரையும் அதிகளவில் தாக்குகிறது.

நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்படும் சில பாதிப்புகள் மற்றும் அறிகுறிகளை இனி பார்ப்போம்.

நீரிழிவு அறிகுறிகள்

  • நீரிழிவு உள்ளவர்களுக்கு அதிகமான தாகம் இருந்து கொண்டே இருக்கும்.
  • அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழிப்பதும் இருக்கும்.
  • எப்பொழுதும் ஒரு சோர்வு இருக்கும்.
  • உடல் பலவீனம், அதிலும் குறிப்பாக உடல் வலி போன்ற அசதி இருக்கும்.
  • கால்களில் வலி அல்லது எரிச்சல் இருக்கும்.
  • கால்களில் குடைச்சல் அல்லது வீக்கங்களும் சில நேரங்களில் இருக்கும்.

இவற்றில் ஏதேனும் ஓரிரு அறிகுறிகள் தொடர்ந்து இருப்பின் அவற்றை கண்காணித்து உடனடியாக அதற்கான வாழ்வியல் மாற்றங்களும், உணவு மாற்றத்தையும் மேற்கொள்வது அவசியமானது. அறிகுறிகள் தொடர்ந்து இருப்பின் கால தாமதமின்றி அதற்கான சிகிச்சை முறையையும் மேற்கொள்வது அவசியம்.