இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடிய ஒரு மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று இந்த நீரழிவு. முன்பெல்லாம் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் வரக்கூடிய வியாதியாக இருந்தது. இதற்கு இன்னொரு பெயராக பணக்கார வியாதி என்றும் இதனை அழைத்தனர். ஆனால் இன்று வளரும் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் தாக்கக்கூடிய ஒரு நோயாக நீரிழிவு மாறிவிட்டது. கர்ப்பிணிகள், குழந்தை பெற இருக்கும் தாய்மார்களையும் இது விட்டுவைக்கவில்லை.
நீரிழிவு என்றால் என்ன?
நீரிழிவு என்பது ஹார்மோன் சார்ந்த தொந்தரவு. இன்சுலின் என்று சொல்லப்படக்கூடிய இந்த ஹார்மோனில் வரக்கூடிய குறைபாடு தான் நீரிழிவு. நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணமான ஹார்மோன் குறைபாட்டை சரி செய்துவிட்டால் போதும், நீரிழிவிலிருந்து படிப்படியாக நாம் வெளிவர முடியும். பிரச்சனைகள் வருவதற்கு மிக முக்கியமான காரணம் நமது உணவு பழக்கமும், நமது வாழ்க்கைப் பழக்கமும்.
இந்த இரண்டிலும் சிறு சிறு மாறுதல்களைச் செய்து கொண்டாலே போதும் நீரிழிவிலிருந்து விரைவாக வெளிவர முடியும். நீரிழிவு உள்ளவர்களுக்கு ஹார்மோன் சார்ந்த தொந்தரவினால் வரக்கூடிய மற்ற தொந்தரவுகள் வருவதற்கும் முதல் காரணம் நமது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளததுதான். இதனால் காலப்போக்கில் இதயம் சார்ந்த பிரச்சனைகள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் என அடுத்தடுத்து பிரச்சனைகளும் உருவாகிறது. இளம்வயது ஆண்கள் பெண்களுக்கு வரக்கூடிய ஹார்மோன் குறைபாடினால் குழந்தையின்மை, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
அதனால் நமது உணவு பழக்க வழக்கத்த்திலும் அன்றாடம் நாம் மேற்கொள்ளும் சில பழக்கவழக்கத்திலும் சிறு மாறுதல்களைச் செய்துகொள்ள ஆரோக்கியமான வாழ்க்கையை பெற முடியும். இந்த ஹார்மோன் சார்ந்த பாதிப்பில் இருந்து வெளிவர முடியும். இதற்கான
சில எளிய வழிமுறைகள்
எந்த அரிசி சிறந்தது
நீரிழிவிற்கு சத்துக்களற்ற வெள்ளை அரிசி நல்லதல்ல. அவை இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதனால் பாரம்பரிய சிகப்பரிசிகளையும், சிறுதானியங்களையும் நமது உணவில் அன்றாடன் எடுத்துகொள்வதால், விரைவில் நல்ல பலனைப் பெறலாம்.
பாரம்பரிய சிகப்பரிசிகளில் மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம் போன்றவை நார்சத்துக்களையும், பல தாது சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை எவ்வாறு சமைப்பது?
கேழ்வரகு – சிறுதானியங்கள்
சிறுதானியங்களில் கேழ்வரகு மிகவும் நல்லது. மற்ற சிறுதானியங்களையும் காலை உணவாக அல்லது மதிய உணவாக எடுத்துகொள்வது சிறந்தது.
வாழைப்பூ
நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த ஒரு மருந்து வாழைப்பூ. வாழைப்பூவை அவ்வப்பொழுது பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ செய்து உணவோடு சேர்த்து சாப்பிடுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
சிறியாநங்கை
நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் மிகப்பெரிய மூலிகை சிறியாநங்கை இலை. இந்த சிறியாநங்கை கசப்புச் சுவையுள்ளது. இந்த இலையை அவ்வப்பொழுது உண்பதால் நல்ல ஒரு பலனை பெறலாம்.
மாமரத்து இலை (மாவிலை)
மாமரத்து இலைகள் துவர்ப்புச் சுவையை கொண்டது. இந்த மாவிலைகளை துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை குடிப்பதாலும் நீரழிவு கட்டுப்படும். இதனை ஒரு சூப்பாகவும் செய்து நம் உண்டு வரலாம். நல்ல ஒரு பலன் அளிக்கும். இதனால் நீரிழிவு மட்டுமில்லாமல் இரத்தமும் சுத்தமாகும்.
பாகற்காய்
பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும், பாகற்காயை ஜூஸ் செய்து பருகுவதும் நீரிழிவிற்கு நல்ல பலனை அளிக்கும்.
கோவை பழம்
நாட்டு கோவைப் பழங்களை சாதாரணமாக சாலை ஓரங்களிலும், மரங்களிலும் பார்க்க முடியும். இவை புதர்களாக படர்ந்திருக்கும். இதனில் ஒன்றை தினசரி சாப்பிட்டு வர நீரழிவு கட்டுப்படும்.
ஆவாரம் பூ
பொன்னான மேனியை அளிக்கும் ஆவாரம் பூக்கள் சர்க்கரை நோய்க்கு நல்லது. மஞ்சள் நிற ஆவாரம் பூவை அப்படியே மென்று சாப்பிட்டு வர குணமாகும். ஆடி மாதம் தொடங்கி மாசி மாதம் வரையில் ஆவாரம் பூக்களை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாம் பார்க்க முடியும். அவற்றை பறித்து பயன்படுத்துவது நல்லது. சிறந்த பலனை கொடுக்கும், மற்ற காலத்திற்கு கிடைக்கும் காலத்தில் சேகரித்து காயவைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
மரப்பட்டை குடிநீர்
முற்றிய வேப்பம்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை, ஆலம்பட்டை ஆகியவற்றை நன்கு உலர்த்தி பொடி செய்து சம அளவு கலந்து சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும். அன்றாடம் இந்த தூளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி அரை டம்ளர் அளவு காலை வெறும் வயிற்றில் குடித்துவர விரைவாக நீரழிவு மதுமேகம் குணமாகும்.
நாவல் பழக் கொட்டை
நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர நீரிழிவு விலகும், இதனால் வரக்கூடிய பாதிப்புகளும் அகலும்.
இரவு உணவு
இரவு உணவை ஏழு மணிக்குள் உட்கொள்வது சிறந்தது.
இரவு உறக்கம்
இரவு பத்து மணிக்குள் உறங்க செல்வதும் காலையும் ஐந்து – ஆறு மணிக்குள் எழுவதால் சீரான இரத்த ஓட்டம் பெருகும், ஹார்மோன் குறைபாடும் விலகும்.