தனு என்றால் வில். உடலை வில் போல் வளைத்து செய்யப்படும் ஆசனம் இந்த தனுராசனம். வயிற்றுப்பகுதியைத் தவிர மற்றவை வளைவிலிருக்கும்.
தனுராசனத்தின் தத்துவம்
உடலை வில்லைப்போல் வளைப்பதால் உடலில் இருக்கும் நரம்புகள் நாணப் போல் பலப்படுவதும், மனம் ஞானம் என்ற அம்பைப் போல் தெளிவும் பெரும் என்பதாகும்.
தனுராசனம் செய்முறை
தரை விரிப்பில் குப்புறப்படுத்து இரண்டு காலையும் முழங்கால் அளவு பின்னால் மடக்கி வலது கையை பின் கொண்டு சென்று வலது கணக்குகாலையும், இடது கையை பின் கொண்டு சென்று இடது கணக்குகாலையும் பிடித்து சற்று உள்நோக்கி இழுக்க வேண்டும். முன்னுடம்பு, தலை, மார்பு பகுதியை கால் முழங்கால் அளவிற்கு சற்று மேல் நோக்கி தூக்கவேண்டும். பின் நிதானமான சுவாசத்தில் ஓரிரு நிமிடங்களில் இயல்பான நிலைக்கு திரும்பவும்.
ஆரம்பத்தில் இரண்டு கால்களையும் செய்யமுடியவில்லை என்றாலும் ஒருகால்களை முதலில் செய்து, பின் மறுகாலை தூக்கி செய்யலாம். இது அர்த்த தனுராசனம் எனப்படும்.
தனுராசனம் பயன்கள்
முதுகு வலி தீரும், வயிற்றுப் பகுதி இளைக்கும், தொடைப்பகுதி பலப்படும். மாதவிடாய் கோளாறுகள், கருப்பை கோளாறுகள் தீரும், மலச்சிக்கல் நீங்கும், வாய்வு மறையும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும், உடல் பருமன் குறையும், மூட்டுவலி நீங்கும்.