நஞ்சு முறிவு குறிப்புகள்

சாதாரணமாக புகையிலை அதிகமாவதாலும், மாமிசம் செரிமானமாகமலும், கஞ்சா, அபின், எருக்கம்பால், கள்ளிப்பால், எட்டி விதை, கண்ணாடி, மண்ணெண்ணெய், மூட்டைப்பூச்சி மருந்து போன்றவை நஞ்சை விளைவிக்கும் தன்மைக் கொண்டது.

இன்று ஒவ்வொன்றிற்கும் நவீன மருத்துவம், ஆங்கில மருந்துகள் வந்தாலும் காலங்காலமாக நமது கிராமங்களிலும் நமது வீடுகளிலும் எந்த விஷமாக அல்லது நஞ்சாக இருந்தாலும் அதனை வீட்டிலிருக்கும் சில பொருட்கள், மூலிகைகளைக் கொண்டு எப்பேர்பட்ட நச்சுகளையும் முறித்தனர். அப்படி நமது பாட்டிகள் கைவைத்தியம் மூலம் முறித்த சில வீட்டுக் குறிப்பை இங்கு பார்ப்போம்.

மாமிச உணவு (இறைச்சி, மீன்)

இறைச்சி, மீன் போன்ற மாமிச உணவுகள் செரிமானமாகாமல் இரைப்பையில் தங்கி நஞ்சாவதுண்டு. இதற்கு கொஞ்சம் மிதமாக தேநீர் பருகினால் நஞ்சு அகலும்.

எருக்கம்பால் நஞ்சு முறிய

காய்ச்சிய பசும் பாலில் மஞ்சளை அரைத்துக் கலந்து 3 வேளை உட்கொள்ள பலன் கிடைக்கும்.

கள்ளிப்பால் நஞ்சு அகல

கலப்பில்லாத தேங்காய் எண்ணெய் இரண்டு அவுன்ஸ் குடிக்க கள்ளிப்பால் நஞ்சு நீங்கும்.

மூட்டைப்பூச்சி மருந்து குடித்தவர்களுக்கு

முதலில் நிறையத் தண்ணீர் கொடுக்க வேண்டும். சிறிது கடுகு அரைத்துக் குடிக்கக் கொடுத்தால் வாந்தி உண்டாகும். வாந்தி உண்டானால், விஷ வீரியம் குறையும். பச்சை முட்டையுடன் இளநீர் சேர்த்துக் குடிக்கலாம். வீரியத்தைப் போக்கலாம்.

மண்ணெண்ணெய் குடித்தவர்க்கு

கடுகு அரைத்து உள்ளுக்குக் கொடுத்து வாந்தி எடுக்கச் செய்து சூடான காப்பி அல்லது தேயிலைப் பானம் கொடுக்க வேண்டும்.

கண்ணாடித் தூளைத் தின்றவர்களுக்கு

இரத்தமாக வாந்தி வரும். மஞ்சள், மாசிக்காய், அதிமதுரம் இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து இஞ்சிச் சாற்றில் கலந்து குடிக்கச் செய்ய வேண்டும்.

புகையிலை

புகையிலை மிகுதியாக உண்டு நஞ்சானால், அகத்திக் கீரையுடன் மிளகு கூட்டி கஷாயம் தயாரித்து 3 வேளை எடுத்துக் கொள்ளலாம்.

கஞ்சா

கஞ்சா குடித்து வெறிவிடம் நீங்க, வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அடிக்கடி குடிக்கலாம்.

எட்டி விதை

எட்டி விதை சாப்பிட்டு நஞ்சேறியவர்கள், காய்ச்சிய பசும் பாலில் கோழி முட்டையின் வெண்கரு சேர்த்துக் குடிக்கலாம்.

பாஷாண நஞ்சு நீங்க

வால் மிளகை வெண்ணய் சேர்த்து நன்றாக அரைத்து உள்ளுக்குக் கொடுக்கலாம்.

அபின் நஞ்சு அகல

பசு நெய்யில் படிகாரத்தைப் பொறித்துச் சாப்பிடலாம்.

குன்றிமணி விஷம் நீங்க

நெய்யில் பழுப்புச் சர்க்கரை கலந்து காலையிலும் மாலையிலும் உண்ண பலன் கிடைக்கும்.

எந்த விஷத்துக்கும் சீந்திற் கிழங்கைக் கஷாயம் செய்து கொடுக்க நல்ல பலனை பெறலாம்.

(2 votes)