‘விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது’ என்பது பழமொழி. வீட்டில் அன்றாடம் விளக்கு ஏற்றுவதால் பல பல நன்மைகள் ஏற்படுகிறது. ஆன்மிகம், இறை நம்பிக்கை ஆகியவற்றை தாண்டி விளக்கு ஏற்றுவதால் தீமைகள் விலகி, ஆரோக்கியமும் செல்வமும் பெருகுகிறது.
சூரிய உதயமாகும் நேரத்திலும் அஸ்தமனமாகும் நேரத்திலும் விளக்கு ஏற்றுவதால் வீட்டில் சுபிக்ஷம், லக்ஷ்மி கடாட்சம் அதிகரிக்கும். இருள் மறைந்து ஒளி பரவும் நேரத்தில் இந்த இரண்டு சக்தியும் தங்களது முழு நிலையில் இருந்து குறைந்து இருக்கும். அந்த நேரத்தில் கண்ணுக்கு தெரியாத தீய சக்திகள், தீமை செய்யும் கிருமிகள் பரவக்கூடும். அதனால் அந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி எந்த தீமையும் நம்மை அணுகாது பாதுகாக்கலாம்.
வீட்டில் விளகேற்றுவதால் நாம் ஏற்றும் எண்ணெய் ஆவியாகி பரவத் தொடங்கும். இதனால் நம்மை சுற்றி, நமது வீட்டைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை நாம் ஏற்படுத்த முடியும். மேலும் இந்த காற்றை நாம் சுவாசிக்கும் பொழுது உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலின் நாடி நரம்புகள், இரத்தக் குழாய் புத்துணர்வு பெறுவதுடன், தூய்மைப்படுத்தப்படும். இதனால் நமது உறுப்புகள் பலப்படும், எண்ண ஓட்டம் சீராகும். மன உளைச்சல், மன சோர்வு நீங்கும். இந்த பதிவில் எந்தெந்த எண்ணெயில், என்னென்ன அகலைக் கொண்டு நாம் விளக்கேற்றினால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம். அதற்கு முன் கட்டாயம் எந்த எண்ணெயில் விளக்கேற்றக் கூடாது என தெரிந்து கொள்வோம்.
எந்த எண்ணெயில் விளக்கேற்றக் கூடாது
இன்று உணவிற்கே சுத்தமான எண்ணெய் கிடைப்பதில்லை, பல மினரல் சேர்த்த பயன்படுத்தி சுத்திகரிக்கப் பட்ட கலப்பட எண்ணெய்கள் அதிகரித்து விட்டது அதனால் விளகேற்றும் எண்ணெய் என பொதுவாக கிடைக்கும் எண்ணெயை கட்டாயம் பயன்படுத்த கூடாது. விளக்கேற்றும் எண்ணெய் என நமக்கு கிடைப்பது என்ன எண்ணெய் என நமக்கு தெரியாது. சுத்திகரிக்கப்பட்ட எந்த எண்ணெய் என தெரியாததால் அவற்றால் பல தீமைகள் ஏற்படும். நுரையீரல் தொந்தரவு, புற்றுநோய், சரும நோய் என பல நோய்களுக்கும் இவை காரணமாக அமைகிறது. மேலும் இன்று நெய் என சாதாரணமாக கிடைக்கும் நெய், பல மிருகங்களின் கொழுப்பிலிருந்து பெறப்படுகிறது. அதனால் இவற்றை தவிர்த்து சுத்தமாக கலப்படமின்றி நாமே இவற்றை அடையாளம் கண்டு விளக்கு ஏற்றுவது சிறந்தது.
எதைக் கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலன்
தீபம் | பலன்கள் |
---|---|
நெய் தீபம் | ஞானம் |
எள் / நல்லெண்ணெய் தீபம் | எம பயம் நீக்கும் |
இலுப்பெண்ணை தீபம் | ஆரோக்கியம் பெருகும் |
ஆமணக்கு / விளக்கெண்ணெய் தீபம் | சகல சம்பத்தும் ஏற்படும் |
வெண்கல விளக்கு | பயம் போகும் |
இரும்பு அகல் | அபமிருத்யு வைப் போக்கும் |
மண் அகல் | வீர்ய விருத்தியை அளிக்கும் |