பேரிச்சம் பழம் பயன்கள்

உலகளவில் இரும்பு சத்துக்களுக்கு பெயர்போனது பேரிச்சம் பழம். நமது நாட்டில் இரும்பு சத்து நிறைந்த கருவேப்பிலை போன்ற கீரைகள் இருந்தாலும் பேரிச்சைக்கு தனி இடமுண்டு. நம் நாட்டில் பேரிச்ச மரங்கள் பயிராவதில்லை. சிற்றீச்ச மரங்களே நமது நாட்டில் உண்டு. இந்தியாவில் கிடைக்கும் பேரிச்சம் பழங்கள் அனைத்தும் மேற்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த நாடுகளில் இருந்து பேரிச்சம் பழம் வற்றலாகவோ, பதம் செய்யப்பட்டதாகவோ, நமக்கு அனுப்பப்படுகிறது.

சிறுவர் முதல் பெரியோர் வரை அன்றாட உணவு உண்டபின் ஒரு வேளையாவது குறைந்தது 2 அல்லது 3 பேரிச்சம் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும். அவை,

பேரிச்சம் பழம் உண்பதால்

  • புதிய இரத்தம் உண்டாகும்
  • உடலின் மேலுள்ள தோல் வழவழப்பாகும்
  • கண் சம்மந்தமான கோளாறுகள் வராது, இருந்தாலும் குணமாகும்
  • நரம்புகளுக்கு முறுக்கு ஏறும்
  • எந்த வகையான தொற்று நோயும் அணுகாது
  • பல் சம்மந்தமான நோய்கள் வராது, இருந்தாலும் குணமாகும்.
  • சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகும்.

பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள்

(20 கிராம் எடையில்)

  • இரும்புத்சத்து – 3 கி.மி.
  • சுண்ணாம்புச் சத்து – 10மி.கி.
  • வைட்டமின் எ – 170மி.கி.
  • வைட்டமின் பி1 – 26மி.கி.
  • வைட்டமின் பி2 – 26 மி.கி.
  • உஷ்ண அளவு – 80 கலோரி

தாது விருத்தி மற்றும் போக சக்தி குறையுள்ளவர்கள் பேரிச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்து நாள் தோறும் சில துண்டுகளைச் சாப்பிட்டுப் பால் பருகிவர நல்ல குணம் தெரியும்.

இருமல், கபம் போன்ற கோளாறுகளுக்குப் பேரிச்சம்பழத்தைப் பாலில் வேக வைத்து உண்டால் நல்ல பலனை பெறலாம்.

(2 votes)