இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை
பத்து வகையான பொருட்கள் சேர்வதால் “தச” என்றும் “காவ்யா” என்பது மாட்டினுடைய பொருட்களையும் குறிக்கும்.
வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள செடிகளுக்கு தசகாவ்யாவை பரிந்துரைக்கப்படுகிறது.
தசகாவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால் பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்படுவதால் நல்லபயனளிக்கிறது.
இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான பூச்சிகளைக் கட்டுப்படுவதோடு, செடிகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.
தேவையான பொருட்கள்
ஆடாதோடை இலை – 1 கிலோ
வேம்பு இலை – 1 கிலோ
எருக்கு இலை – 1 கிலோ
காட்டாமணக்கு இலை – 1 கிலோ
ஊமத்தை இலை – 1 கிலோ
கொழிஞ்சி இலை – 1 கிலோ
தும்பை இலை – 1 கிலோ
நொச்சி இலை – 1 கிலோ
புங்கம் இலை – 1 கிலோ
பசுஞ்சாணம் – 1 கிலோ
கோ மூத்திரம் – 1 லிட்டர்
பால் – 1 லிட்டர்
தயிர் – 1 லிட்டர்
நெய் – 1 லிட்டர்
தயாரிக்கும் முறை
- இவற்றில் ஏதேனும் ஐந்து செடி இலைகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே போதும். அவற்றை சிறுதுண்டுகளாக்கி தனித்தனியே கோ மூத்திரம் கலந்து பத்து நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
- பத்து நாட்களுக்குப் பின் இவற்றை நன்கு பிழிந்து வடிகட்டி சாறு எடுக்க வேண்டும்.
- பின் பசுஞ்சாணம், பால், தயிர், நெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் இந்த கோ மூத்திர சாறினையும் சேர்த்து 25 நாட்கள் அப்படியே வைக்கவேண்டும்.
- 25 நாட்களுக்கு தினமும் காலை, மாலை என இருவேளை இதனை கலக்கி விடவேண்டும்.
- 25 நாட்களுக்குப் பின் இதனை வடிகட்ட கிடைப்பது தசகவ்யம்.
பயன்படுத்தும் முறை
1 லிட்டர் நீருடன் 30 மில்லி தசகாவ்யா கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
மற்றொரு முறை தசகாவ்யா – 1
- பஞ்சகவ்யாவைப் போல் செடிகளுக்கு / பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும், மண்ணிற்கும், செடிகளுக்கும் தேவையான சத்துக்களை அளிக்கவும் உதவுகிறது.
- செடிகளுக்கு தேவையான நுண்ணூட்ட பேரூட்ட சத்துக்களை அளிக்கிறது.
- பூக்கள், காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- மேலும் செடிகளின் பூச்சி, பூஞ்சணம் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து எதிர்ப்பாற்றலையும் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.
மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு