orgainc-fertilizer, Plant Growth Promoter, Iyarkai Vivasayam, Pest Control, Kitchen Garden, Terrace Garden, Organic Manure

தசகாவ்யா – 1

இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

பத்து வகையான பொருட்கள் சேர்வதால் “தச” என்றும் “காவ்யா” என்பது மாட்டினுடைய பொருட்களையும் குறிக்கும்.

வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள செடிகளுக்கு தசகாவ்யாவை பரிந்துரைக்கப்படுகிறது.

தசகாவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால் பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்படுவதால் நல்லபயனளிக்கிறது.

இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான பூச்சிகளைக் கட்டுப்படுவதோடு, செடிகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.

orgainc-fertilizer, Plant Growth Promoter, Iyarkai Vivasayam, Pest Control, Kitchen Garden, Terrace Garden, Organic Manure

தசகவ்யா தயாரிப்பு முறை :

தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய் களையும் விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

அவை

  • ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg.
  • ஊமத்தை (Datyra metal) 1 kg.
  • நொச்சி (Vetex negundo) 1 kg.
  • வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg.
  • வேப்பிலை (Azadirachta indica) 1 kg.

மேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும் 1 : 1 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக்தொட்டியில் ஊரவைக்க வேண்டும். (1கிலோ நறுக்கிய இலைகள் – 1 லிட்டர் மாட்டு பசுமாட்டு சிறுநீர்)

11 நாட்கள் கழித்து தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

வடிகட்டிய அனைத்து வகையான தாவர சாரை ஒவ்வொரு 5 லிட்டர் பஞ்சகாவ்யா கரைசலில் 1 லிட்டர் என்ற அளவில் சேர்க்கவேண்டும்.

இதனை 25 நாட்கள் வைத்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளைக்கு ஒரு முறை கிளறிவிடவேண்டும்.

25 நாட்களுக்குப் பிறகு 3 சதவீதக் கரைசலைத் தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

மற்றொரு முறை – தசகாவ்யா 2

தசகவ்யா பயன்படுத்தும் முறை :

தசகாவ்யா கரைசலை வடிகட்டவும். இல்லையெனில் தெளிப்பானின் நுனியில் அடைப்பு ஏற்படும்.

தசகவ்யா பயன்கள் :

தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.

பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி,சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது.

தசகவ்யா தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

தசகவ்யா கரைசலை தெளிப்பதால், மாவுப்பூச்சி உள்ளிட்ட எந்தப் பூச்சி, வண்டின் தாக்குதலும் கிடையாது.

செடியின் வளர்ச்சி, மகசூல் மற்றும் பயிரின் தரம் அதிகமாகும்.

அசுவுணி, செடிப்பேன், சிலந்தி மற்றும் இதர உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.

இலைப்புள்ளிகள், இலைக்க கருகல், சாம்பல் நோய் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்த உதவும்.

இதனை பயன்படுத்தும் முன் ஓட்டும் திரவமான காதி சோப்புக் கரைசலைப் பயன்படுத்தவேண்டும். காதி சோப்பினை ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்து அதனோடு இந்த கரைசலையும் சேர்த்து, அதாவது ஒரு லிட்டர் காதி சோப்பு கரைசலுடன் 4 மிலி இந்த கரைசலை நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கவேண்டும். இந்த காதி சோப்பு ஓட்டும் கரைசலை பயன்படுத்தினால் தான் நாம் தயாரித்த இந்த தாவர கரைசல் இலைகளின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு சிறந்த பயன்தரும்.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

(1 vote)