கறிவேப்பிலைத் துவையல்

கருவேப்பிலை துவையல் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்து. பெண்களின் கருப்பையை பலப்படுத்தக் கூடியது. கருப்பையில் வரக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்து.

முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு அற்புதமானது. இரத்த சோகையை அகற்ற கூடியது. பலவிதமான சத்துக்களை உட்கிரகிக்கவும் உதவக்கூடியது.

தேவையான பொருட்கள்

  • 2 கைப்பிடி கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதளவு புளி அல்லது கொடம்புளி
  • சிறிது உப்பு
  • 2 துண்டு தேங்காய்

செய்முறை

  • இளம் கறிவேப்பிலை இலைகளை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பச்சை மிளகாய், சிறிதளவு புளி, உப்பு, தேங்காய் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • இது உடனடி உபயோகத்திற்கு சிறந்தது.
  • சற்று நாள் பட்டு அல்லது நேரம் கழித்து உண்ண வேண்டும் என்றால் அனைத்தையும் எண்ணெயில் வதக்கி அரைக்க வேண்டும்.
  • பச்சையாக அரைக்கும் போது தான் அதன் முழு சத்துக்களையும் பெற முடியும்.
  • உடல் நலக் குறைவால் உள்ளவர்களுக்கு கொடுக்கும் போது புளியை சற்று சுட்டு அரைக்க வேண்டும்.

எளிமையாக வீட்டிலேயே கறிவேப்பிலை வளர்க்க அபரிவிதமான சத்துக்களையும் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *