உணவுக்காக பயன்படுத்தி பின் தூக்கி எறியும் இலைகளில் மிக முக்கியமான இலை கருவேப்பிலை. பெண்கள் கருப்பையில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் இலை என்பதால் இதற்கு கருவேப்பிலை எனப் பெயர் வந்ததாக கூறுவர். உணவில் உள்ள நச்சுக்களை நீக்கவும் இந்த கருவேப்பிலை பயன்படுகிறது.
இந்த கருவேப்பிலையை வாசனைக்காகவும் அதன் தனிப்பட்ட சுவைக்காகவும் உணவுகளில் சேர்க்கிறோம். சுவை, மணத்தை தாண்டி பல பல சத்துக்களும் அமிலங்களும் நிறைந்திருக்கும் ஒரு அற்புதமான இலை இந்த கருவேப்பிலை.
முடி உதிர்தல், இரும்பு சத்து குறைபாடு, இரத்த சோகை, நீரிழிவு, புற்றுநோய் என சாதாரண உடல் தொந்தரவுகள் தொடங்கி உயிர் கொல்லி நோய்களுக்கும் மிக சிறந்த மருந்தாக இருக்கும் அற்புத மருந்து இந்த கருவேப்பிலை.
பொதுவாக குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இவ்வளவு பயன்கள் இந்த கருவேப்பிலையில் உள்ளது என தெரிந்தாலும் உணவிற்கு இடையில் வரும் கருவேப்பிலையை பொதுவாக பலரும் ஒதுக்கிவிடுவதுண்டு. இவ்வளவு சத்துக்களும் இருக்கும் கருவேப்பிலையை ஒதுக்கி தூரப்போடுவதால் எந்த பயனும் நமக்கு கிடைக்காது. அதனால் அனைவரும் விரும்பும் வகையில் கருவேப்பிலையை பொடியாக செய்து உணவுடன் சாப்பிட கருவேப்பிலையின் பெரும்பாலான சத்துக்களையும் நாம் பெறமுடியும்.

தேவையான பொருட்கள்
- ¼ கிலோ கருவேப்பிலை
- 100 கிராம் துவரம் பருப்பு
- 100 கிராம் உளுத்தம் பருப்பு
- 10 வர மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
- கருவேப்பிலையை முதலில் நன்கு சுத்தம் செய்து காற்றோட்டம் உள்ள நிழலில் நன்கு காய வைத்துக் கொள்ள வேண்டும்,
- கருவேப்பிலை நன்கு சருகாக காய்ந்த பின் அதனை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் எண்ணெயில் பருப்பு வகைகளை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வர மிளகாயையும் எண்ணெயில் வறுத்துக் கொண்டு உப்பையும் வறுக்க வேண்டும்.
- பின் காய்ந்த கருவேப்பிலை, வறுத்த பருப்பு, மிளகாய், உப்பு ஆகியவற்றையும் மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான கருவேப்பிலை பொடி தயார்.
- கருவேப்பிலையை எண்ணெயில் வறுக்காமல் இவ்வாறு காயவைத்து சேர்ப்பதால் பெரும்பாலான சத்துகளையும் பெறமுடியும்.
- இதை எடுத்து இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் விட்டு தொட்டு சாப்பிடலாம், சாதத்தோடு நெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

கருவேப்பிலை பொடி

கருவேப்பிலையை வறுக்க தேவையில்லையா?
தேவையில்லை. நன்றி