கருவேப்பிலையை இவ்வாறு பயன்படுத்தலாம்

கருவேப்பிலையில் பல சத்துக்களும், எண்ணிலடங்கா மருத்துவகுணங்களும் உள்ளது என கருவேப்பிலை பயன்கள் மற்றும் மருத்துவகுணங்கள் பகுதியில் பார்த்தோம். இவ்வளவு சத்துக்கள் உள்ள கருவேப்பிலையை அன்றாடம் எவ்வாறெல்லாம் நாம் உண்ணலாம் என்று பார்ப்போம். 

  • பச்சையாக ஒவ்வொரு நாளும் புதிதாக கிடைக்கும் நான்கைந்து கொழுந்து கருவேப்பிலையை காலையில் மென்று தின்பது சிறந்தது. பல வியாதிகளுக்கு இது மருந்தாக அமையும். 
    மேலும் கருவேப்பிலையின் பயன்கள் நன்மைகளும் – காணொளி.
  • ஒரு கை கருவேப்பிலையை தேங்காய், இஞ்சி, ஏலக்காய், நாட்டுச்சக்கரை சேர்த்து பருகுவது சிறந்து. உடலில் ஏற்படும் இரத்தசோகைக்கு இதற்கு மிஞ்சிய மருந்து இல்லை என்றே கூறலாம். கருவேப்பிலை கீர் காணொளி.
  • கருவேப்பிலையை சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு, இந்துப்பு கலந்து பருகலாம். இவ்வாறு செய்வதால் உடல் பருமன் இருந்து எளிதாக வெளிவரலாம்.
(1 vote)