தயிர் சாதம் – சுவையாக செய்வது எவ்வாறு

அன்றாடம் உணவில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு உணவு தயிர் சாதம். நம்மில் பலர் இந்த தயிர் சாதத்தில் செய்வதற்கு என்ன உள்ளது என்று கூட யோசிக்கலாம். ஒவ்வொரு நாளும் உணவை நிறைவு செய்ய சிறிது சாதமும் அதனுடன் சிறிது மோரும் சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு அது தயிர்சாதத்தில் செய்ய ஒன்றுமில்லை ஆனால் அந்த சாதத்தை நன்கு குழைய வேகவைத்து, அதல் அளவான தயிர், நிறைய வெண்ணைப் பால் தாளிப்பு என சேர்க்க தேவாமிர்தமாக இருக்கும்.

பலரும் பிரமாதமான உணவுகளை விட சாதாரணமாக தயிர்சாதம் இருந்தாலே போதும் என கூறக் கேட்டிருப்போம். அந்தளவிற்கு ஒரு நிறைவையும் சுவையையும் அளிக்கும் சிறந்த உணவு. பலருக்கும் இந்த தயிர் சாதம் இருந்தாலே போதும் நிறைவான மதிய உணவு திருப்தியை அது அளிக்கும்.

நல்ல ஒரு சுவையான தயிர் சாதம் எவ்வாறு செய்யலாம் என பார்போம். இந்த தயிர் சாதத்தை பாரம்பரிய அரிசியான வெள்ளை அரிசி கிச்சிலி சம்பா அரிசியை கொண்டு செய்ய கூடுதல் சுவையையும், ஆரோக்கியத்தையும் பெறமுடியும். இந்த கிச்சிலி சம்பா அரிசியை மண்சட்டியில் எளிதாக அன்றாட உணவிற்கு வடித்து சமைக்க சத்துக்களும் கூடும். நன்கு குழைய இந்த அரிசியை வேகவிடும் வடித்து தயிர் சாதத்திற்கு பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி (கிச்சிலி சம்பா அரிசி )
  • 1 கப் வெண்ணெய் நீக்காத பசும் பால்
  • ½ கப் வெண்ணெய் நீக்காத பசுந் தயிர்
  • 1 ஸ்பூன் கேரட் (பொடியாக நறுக்கியது )
  • 2 ஸ்பூன் வெள்ளரிக்காய், மாங்காய் (பொடியாக நறுக்கியது)
  • 1 ஸ்பூன் கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)
  • 1 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
  • 1 ஸ்பூன் இஞ்சி (மைய விழுது போல் இடித்து எடுத்தக் கொள்ளவேண்டும்.)
  • உப்பு

தாளிக்க

  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் உளுந்து
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • சிறிது கறிவேப்பிலை

செய்முறை

  • கிச்சிலி சம்பா அரிசியை நன்கு இரண்டு மூன்று முறை கழுவி 4 பங்கு தண்ணீர் விட்டு நன்கு குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரிசி நன்கு வெந்ததும் அந்த கிச்சிலி சம்பா சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கி மேலும் குழைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் வெண்ணெய் நீக்காத சூடான பசும் பால் சேர்த்து குழைத்து விடவும். மேலும் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்துக் கொண்டு அதற்கு பதிலாக மேலும் பால் சேர்த்து கலந்துவிடவும். பின் இந்த கலவையை ஆறவிடவும்.

  • சற்று ஆறியப்பின் வெண்ணெய் நீக்காத பசுந் தயிர், கேரட், வெள்ளரிக்காய், மாங்காய், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  • பின் தாளிக்க உள்ளதை எண்ணெய்யில் தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான தயிர் சாதம் தயார்.
  • இதனுடன் வறுவல், பொரியல், தொக்கு சேர்த்து உண்ண சுவை கூடும்.

குறிப்புகள்

  • சூடான பாலை சேர்க்க சுவைகூடும். ஆனால் ஆறியவுடனேயே தயிரை சேர்க்கவேண்டும். உடனடியாக சாப்பிடப்போகிறோம் என்றால் பாலின் அளவை குறைத்து தயிரின் அளவை கூடிக் கொள்ளலாம். மதிய உணவிற்காக காலையில் தயரிப்பதென்றால் தயிர் குறைவாக இருந்தால் நல்லது. இல்லையென்றால் புளிப்பு சுவை கூடிவிடும். 
  • தயரிக்கும் பொழுது தயிர்சாதம் சற்று தளர்வாக இருக்க வேண்டும். அதற்கேற்றார்போல் தயிர், பால், தண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  அப்பொழுதுதான் சாப்பிடும்பொழுது சரியாக இருக்கும்.

  • கேரட், வெள்ளரிக்காய், மாங்காய் இல்லையென்றாலும் பரவாயில்லை, பழங்கள் மாதுளை, திராட்சை சேர்க்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை. காய்களும், பழங்களும் கூடுதல் சுவைக்காகத்தான்.
  • குழந்தைகளுகென்றால் மிளகாயை தவிர்ப்பது சிறந்தது. இஞ்சியையும், மிளகாயையும் தாளித்துக் கூட சேர்க்கலாம். 

தயிர் சாதம்

அன்றாடம் உணவில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு உணவு தயிர் சாதம்.
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி (கிச்சிலி சம்பா அரிசி)
  • 1 கப் வெண்ணெய் நீக்காத பசும் பால்
  • ½ கப் வெண்ணெய் நீக்காத பசுந் தயிர்
  • 1 ஸ்பூன் கேரட் (பொடியாக நறுக்கியது )
  • 2 ஸ்பூன் வெள்ளரிக்காய், மாங்காய் (பொடியாக நறுக்கியது)
  • 1 ஸ்பூன் கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)
  • 1 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
  • 1 ஸ்பூன் இஞ்சி (மைய விழுது போல் இடித்து எடுத்தக் கொள்ளவேண்டும்.)
  • உப்பு

தாளிக்க

  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் உளுந்து
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • சிறிது கறிவேப்பிலை

செய்முறை

  • கிச்சிலி சம்பா அரிசியை நன்கு இரண்டு மூன்று முறை கழுவி 4 பங்கு தண்ணீர் விட்டு நன்கு குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரிசி நன்கு வெந்ததும் அந்த கிச்சிலி சம்பா சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கி மேலும் குழைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் வெண்ணெய் நீக்காத சூடான பசும் பால் சேர்த்து குழைத்து விடவும். மேலும் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்துக் கொண்டு அதற்கு பதிலாக மேலும் பால் சேர்த்து கலந்துவிடவும். பின் இந்த கலவையை ஆறவிடவும்.
  • சற்று ஆறியப்பின் வெண்ணெய் நீக்காத பசுந் தயிர், கேரட், வெள்ளரிக்காய், மாங்காய், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  • பின் தாளிக்க உள்ளதை எண்ணெய்யில் தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான தயிர் சாதம் தயார்.
  • இதனுடன் வறுவல், பொரியல், தொக்கு சேர்த்து உண்ண சுவை கூடும்.

குறிப்புகள்

சூடான பாலை சேர்க்க சுவைகூடும். ஆனால் ஆறியவுடனேயே தயிரை சேர்க்கவேண்டும். உடனடியாக சாப்பிடப்போகிறோம் என்றால் பாலின் அளவை குறைத்து தயிரின் அளவை கூடிக் கொள்ளலாம். மதிய உணவிற்காக காலையில் தயரிப்பதென்றால் தயிர் குறைவாக இருந்தால் நல்லது. இல்லையென்றால் புளிப்பு சுவை கூடிவிடும். 
தயரிக்கும் பொழுது தயிர்சாதம் சற்று தளர்வாக இருக்க வேண்டும். அதற்கேற்றார்போல் தயிர், பால், தண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  அப்பொழுதுதான் சாப்பிடும்பொழுது சரியாக இருக்கும்.
கேரட், வெள்ளரிக்காய், மாங்காய் இல்லையென்றாலும் பரவாயில்லை, பழங்கள் மாதுளை, திராட்சை சேர்க்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை. காய்களும், பழங்களும் கூடுதல் சுவைக்காகத்தான்.
குழந்தைகளுகென்றால் மிளகாயை தவிர்ப்பது சிறந்தது. இஞ்சியையும், மிளகாயையும் தாளித்துக் கூட சேர்க்கலாம்.