தயிர் பயன்கள், நன்மைகள் / Curd Benefits

பாலை விடத் தயிரும் அதைவிட மோரும் உடலுக்கு நன்மை பயப்பவை. ஒவ்வொரு நாளும் தயிரோ, மோரோ இன்றி நம் உணவை பூர்த்தி செய்வது நல்லதல்ல. தயிர் சாதத்திற்கு இன்னொரு பெயர் அன்னபூரணி.

தயிரின் மருத்துவ குணங்கள்

  • பசியை தூண்டும்
  • உடலுக்கு குளிர்ச்சி தரும்
  • குமட்டல் வாந்தி நீங்கும்
  • ஜீரணமின்மையைப் போக்கும்
  • பேதியை கட்டுப்படுத்தும்
  • மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்

தயிரில் உள்ள சத்துக்கள்

தயிரில் சுண்ணாம்புச் சத்தும்; புரத சத்துக்கள், வைட்டமின் சத்துக்களும் உள்ளன. எனவே இச்சத்துக்கள் பற்றாக்குறையால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் தயிர் நல்லது.

தயிரில் இருக்கக்கூடிய பலவிதமான நுண்ணூட்டச் சத்துக்கள், ப்ரோபயாடிக் சத்துகளும் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறவும், கழிவுகள் உடலில் தேங்காதவாறும் உடலை பாதுகாக்க உதவும். மேலும் ஜீரண மண்டலத்தை வலுப்படுத்தும், ரத்தத்தை சுத்தமாக்கும்.

சருமம் பளபளக்க தயிர்

சருமம் பளபளக்கும், சூரிய வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கவும் கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் தயிர் அல்லது மோரை உடலில் பூசி குளித்து வர சருமம் வியக்கும் அளவு பளபளக்கும். முகமும் உடலும் மினுமினுக்கும்.

தலைமுடி மிருதுவாக தயிர்

தலைமுடி மிருதுவாக நீளமாக ஆரோக்கியமாகத் தயிரை விடச் சிறந்தது வேறு எதுவுமில்லை. தயிர் மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மண்டையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் தயிரைத் தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்தால் பொடுகு ஒழியும். தூக்கமின்மைக்கும் தலைச் சூட்டிற்கும் கூட தயிர் குளியல் நல்லது.

வறண்ட முகமா? கோடுகளா? பள்ளம் மேடா?

கவலை வேண்டாம். நாள்தோறும் தயிரை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து முகம் கழுவ, விரைவில் பயன் கிடைக்கும். வறண்ட சருமம் மறையும், சருமத்தில் இருக்கும் பள்ளம் மேடு, கோடுகள் மறையும்.

முகப் பருக்களை ஒழிக்க வேண்டுமா?

மேற்கண்ட முறையில் பயன்படுத்தலாம், கூடுதலாக தயிரை சிறிது கடலை மாவு கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர பருக்கள் மறையும்.

கால்கள் சோர்ந்து விட்டனவா?

தயிருடன் வினிகர் கலந்து கால்கள் மீது தடவ புத்துணர்ச்சி கிடைக்கும். கால்கள் வலுப்பெறவும், புத்துணர்வு பெறவும் தொடர்ந்து பாதம், கணுக்கால், குதிகால் ஆகிய பகுதிகளில் தயிரை நன்கு தேய்த்துக் குளிக்கலாம்.

விஷக்கடிகளுக்கு

தயிருடன் கருப்பு மிளகு கலந்து உண்டால் பாம்புக் கடி விஷம் முறியும்.

அன்றாடம் நமது உணவில் தயிரை சேர்த்து உண்ணுவது அவசியமானது. தயிரில் தயாரிக்கக்கூடிய பலவிதமான உணவுகளையும் உண்பது சிறந்தது. மோராகவும், தயிர் சாதமாக மட்டுமில்லாமல் கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தயிரோடு சேர்த்து சாப்பிடலாம் அல்லது வெள்ளரிக்காயை சேர்த்து சாப்பிடலாம் அல்லது சின்ன வெங்காயத்தை நறுக்கி தயிரோடு சேர்த்து ஒரு பச்சடியாக செய்து சாப்பிடலாம், இவ்வாறு ஒவ்வொரு நாளும் தயிரை பச்சடியாகவோ அல்லது நேரடியாகவோ ஏதோ ஒரு வகையில் உணவுடன் உட்கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும்; மேனி அழகு பாதுகாக்கப்படும்.

(2 votes)