உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் பழங்களில் ஒன்று வெள்ளரி பழம். இந்த பழத்தை உண்டு விட்டு அதனுள் இருக்கும் பொக்கிசமான விதைகளை தூரப்போடுவதால் அதனில் இருக்கும் நன்மைகளையும், சத்துக்களையும் நாம் இழக்கிறோம்.
பொதுவாக விதைகளில் அதிக புரதம் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கும். அதைப்போல் வெள்ளரி விதைகளிலும் பல பல சத்துக்கள் உள்ளது. தாது சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள் உட்பட பல சத்துக்கள் இதில் உள்ளது. இவை இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் சிறந்த உணவு.
வெள்ளரி விதைகளின் பயன்கள், நன்மைகள்
- சருமம் பொலிவு பெரும்.
- உடல் வறட்சியைப் போக்கும்.
- கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
- எலும்புகள் வலுப்பெறும்.
- நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
- இருதயத்தை பாதுகாக்கும்.
- கல்லடைப்பை நீக்கும்.
- வீக்கங்களை குறைக்கும்.
- இரத்த சர்க்கரைக்கு நல்லது.
- இரைப்பையை பாதுகாக்கும்.
- ஜீரணத்தை சீராக்கும்.
வீட்டில் எவ்வாறு வெள்ளிரி விதைகளை பெறுவது.
வெள்ளரி பழங்களை நறுக்கிய பின் கிடைக்கும் விதைகளை நன்கு அலசி, காய வைக்க வேண்டும். ஈரப்பதம் சிறிதும் இல்லாமல் காய்ந்த பின் அதன் மேல் தோலை நீக்கி விட்டு விதைகளை பயன்படுத்தலாம். அல்லது விதைகளை வறுத்து, பொடித்தும் வைக்கலாம்.
பொடித்த விதைகளை நெய்யுடன் சேர்த்து உண்ண கல்லடைப்பு நீங்கும், தாது அதிகரிக்கும், நீர்த்துவாரச் சதை குறையும், இரைப்பை சீராகும்.