கோடைக்காலம் என்றதுமே நமக்கு தேவைப்படும் உணவுகள் உடலுக்கு குளிர்ச்சியையும், நீர்சதுக்கள் நிறைந்தவாரும், நாவறட்சியை போக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒருசேர கொண்ட ஒரு காய் என்றால் அது வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்துக்கள் அதிகமாகவும், கடும் நர்வறட்சியையும் விரட்டும் தன்மையோடு பசியையும் உண்டாக்கி உடலை குளிரவைக்கும் அற்புத காய். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சிறந்த காய் இந்த வெள்ளிரி.
வெள்ளரியில் வைட்டமின் சத்துக்களை விட தாதுச் சத்துக்கள் கால்சியம், மக்னிசியம், இரும்பு, பாஸ்பரஸ், சோடியம், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை நிறைந்துள்ளது. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் இந்த வெள்ளரிக்காயில் மிக அதிகமாக உள்ளது.
ஈரல், கல்லீரல்
நமது உள்ளுறுப்புகளான ஈரல், கல்லீரல் ஆகியவற்றின் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் இந்த வெள்ளரிக்காய்க்கு அதிகமுண்டு. அதனால் வெள்ளரிக்காயை உண்பதால் ஈரல், கல்லீரலில் ஏற்படும் நோய்கள் தணியும். செரிமானம் சீராகுவதுடன், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுவதால் பசிரசம் என்னும் சிறப்புச் சீரண நீர் சுரக்கிறது என பல ஆய்வுகள் வெளியிட்டுள்ளது. மலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட வெள்ளரிக்காய் பித்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.
சரும நோய்கள்
தோலில் ஏற்படும் நிறமாற்றம், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு.
திரிதோஷம் போக
வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் திரிதோஷமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன.
நிகோடின் நஞ்சு வெளியேற
புகைப்பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. இந்த நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.
மூளைக்கு
மூளைக்கு மிகச்சிறந்த வலிமையை தரக்கூடியது வெள்ளரிக்காய்.
மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்களின் தலை அதிகம் சூடாக இருக்கும். மூளைக்குக் குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் அளிக்கும் அற்புத உணவு வெள்ளரிக்காய்.
நுரையீரலுக்கு
நுரையீரலில் ஏற்படும் தொந்தரவுகள், கோளாறுகள், கபம் இருமல் இருப்பவர்கள் வெள்ளரிக்காயை உண்பது சிறந்த பலனை அளிக்கும்.