பசுவின் சிறுநீர்

இயற்கை வழியில் பூச்சி நோய் நிர்வாகம்

பசு என்பது இந்துக்களுக்கு புனிதமான ஒரு விலங்கு. பண்டைய இந்தியாவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு வகித்தது, பண்டைய காலங்களிலிருந்து நம் முன்னோர் இந்த பசுக்களை வழிபட்டனர்.

பசுவின் சிறுநீர் (கோ மூத்திரம்) மற்றும் மாட்டின் சாணம் (கோமயம்) ஆகியவை பெரிய மருத்துவ மதிப்பைக் கொண்டிருந்தது. நமது வேறொரு பதிவில் பஞ்சகவ்யம் பற்றி பார்தோம். பசுவின் சாணம், கோ மூத்திரம், பால், தயிர், நெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சிறந்த இயற்கை உரம். இது இயற்கை உரம் மட்டுமல்ல, ஒரு சிறந்த பூச்சிவிரட்டி, செடிகளின் நோய் நிவாரணி, வளர்ச்சி ஊக்கி என பல பல ஆற்றலும் பெற்றது.

இவற்றில் கோ மூத்திராத்திற்கு அதிக மருத்துவ மதிப்பு உள்ளது. ஆயர்வேதம் இந்த கோ மூத்திரத்தை அம்ரிதா என்கிறது. அதாவது வாழ்க்கைக்கு மிக அவசியமான அமிர்தம் என்பதாகும். இந்தியாவிலும் பல நாடுகளிலும் நாட்டு பசுவின் கோ மூத்திரத்தை பயன்படுத்தி பல மருந்துகளை குறிப்பாக புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்கின்றனர்.

கோ மூத்திரம் அதன் நுண்ணுயிர் கொல்லி பண்புகளால் வழக்கமான தூய்மைப்படுத்தும் நீர்ம கரைசல்களில் சிறப்பாக உதவுகிறது. கோ மூத்திரம் கொண்டு தரையை துடைப்பது எல்லா பாக்டீரியாக்களையும் நீக்கி இடத்தை தூய்மைப்படுத்தும் பண்புகொண்டது. கோ மூத்திரத்தில் நீர் 95%, யூரியா 2.5%, மற்ற நொதிகள் மற்றும் கலவைகள் 2.5% உள்ளது.

இயற்கை விவசாயத்தில் பல பல நன்மைக்காக இந்த கோ மூத்திரம் (பசுவின் சிறுநீர்) பயன்படுகிறது. சிறந்த கிருமி நாசினியான இந்த கோமூத்திரம் செடிகளின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கக்கூடியது. தன்னிச்சையாகவும், சில மூலிகைகளுடனும் சேரும் பொழுது ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக வேலை செய்கிறது. மேலும் செடிகளில் ஏற்படும் நோய்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டதாகவும் உள்ளது.

இயற்கை விவசாயத்திற்கும் வீட்டு தோட்டம், மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் மிகுந்த தொந்தரவை அளிக்கக்கூடியது பூச்சி தக்குதல். இந்த பூச்சி தாக்குதலுக்கு எளிமையான ஒரு நிவாரணத்தை அளிக்கக் கூடியது இந்த கோ மூத்திரம்.

சாதாரணமாக வீட்டருகில் இருக்கும் நாட்டு பசுவின் கோ மூத்திரத்தை 50 மிலி எடுத்துக்கொண்டு அதனுடன் 1/2 லிட்டர் தண்ணீருடன் கலந்து காலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிப்பதால் செடிகளில் ஏற்படும் பூச்சி தாக்குதல், வைரஸ் மற்றும் பக்டீரியா மூலம் பரவும் நோய்களையும் எளிமையாக தடுக்கலாம். சிறந்த பூச்சி விரட்டியாகவும் இது செயல்படும்.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

2 thoughts on “பசுவின் சிறுநீர்

Comments are closed.