இன்டர்நெட்டில் உணவு, ஆன்லைனில் தண்ணீர், உடனடி உணவு கலவைகள், உடனடி மாவு, பெரிய பெரிய சூப்பர்மார்கெட்டில் பதப்படுத்தப்பட்டிருக்கும் உணவினை அங்கேயே வாங்கி அங்கேயே மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தும் முறை, சில்லென்று பிரிட்ஜ் தண்ணீர் இப்படி உலகம் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க மீண்டும் மறுபக்கம் விஸ்வரூபம் எடுக்கிறது.
செப்பு கமண்டலமும், குடங்களும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் அனைத்து வீடுகளிலும் இருந்த செப்பு பாத்திரங்கள் கடந்த இருபது ஆண்டுகாலமாக வீட்டிற்கு அடைசல் என்று கருதி வெளியேற்றப்பட்டது. ஆனால் சமீப காலமாக அவை புது வடிவில் நுழைந்திருக்கிறது.
அருந்த தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கமண்டலங்கள் இன்று செப்பு தண்ணீர் பாட்டில்களாகவும், குவளைகளாகவும் மாறியுள்ளது.
பழமையும் புதுமையும் கலந்த செப்பு பாத்திரங்களும், தண்ணீர் குடங்களும் இன்று பரவலாக ஏராளமான காரணங்கள் உள்ளது.
நமது முன்னோர்கள் எதையும் காரணமில்லாமல் செய்யவில்லை. அவர்களின் வாழ்வியல் முறைகளில் இருந்த அறிவியலை அன்றாட பழக்கங்களாக நடைமுறைப்படுத்தினார். அவற்றை மூடநம்பிக்கை, நாட்டுப்புறம் என்றெல்லாம் கேலிசெய்ததோடு அந்த பழக்கங்களையும் கைவிட்டோம்.
இன்றோ அறிவியல் ஆராய்ச்சிகள் நமது உடல் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு திறனோடும் இருக்க பலவற்றைக் கூறுகிறது. அவற்றில் ஒன்றாகத்தான் செப்பும் உள்ளது. உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட செப்பு அவசியமாகிறது.
பொதுவாக சத்துக்கள் பட்டியலில் பெரும்பாலும் மாவுசத்து, புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்றவை அத்தியாவசியாமானாலும் இந்த சத்துக்களை உடல் உட்கிரகித்து பலவிதமான என்சைம்களையும், சுரப்பிகளையும் உருவாக்க சில அத்யாவசிய தாதுக்கள் அன்றாடம் அவசியமாகிறது.
உடல் சீராக இயங்க தேவையான பலவகை நொதிகளையும், அமினோ அமிலங்களையும் உருவாக்க உடலுக்கு அவசியமாகிறது செப்பு தாது.
செப்பு தாதுவை உடல் தானாகவே உற்பத்தி செய்ய முடியாது அதனால் தான் அந்த காலத்திலேயே செப்பு சார்ந்த பாத்திரங்களை நமது முன்னோர்கள் பயன்படுத்தினர்.
செப்பு உடலுக்கு மிகமுக்கியமான துணைக்காரணியாக உள்ளது. அதனாலேயே செப்பு பாத்திரத்தில் சமைப்பதும், நீரினை சேமித்து அருந்துவதும் நடைமுறையில் இருந்தது. உடலில் செப்பு தாது குறையும் பொழுது பலவகையான உடல் குறைபாடுகளும், நோய்களும் எளிதாக ஏற்படுகிறது.
குறைந்த அளவே செப்பு தாது உடலுக்கு தேவைப்பட்டாலும், அது அத்தியாவசியமானது. செப்பினை தானாகவும் உடல் உற்பத்திசெய்யாது, அதுமட்டுமல்லாமல் மிக குறைந்த உணவுகளிலேயே செப்பு தாது உள்ளது..
ஆக எளிதாக தண்ணீரை சேமித்து வைக்க அந்த செப்பு கலந்த நீரினை அருந்த செப்பு சத்து உடலுக்கு கிடைக்கப்பெறுகிறது.
அதுமட்டுமல்ல தண்ணீரினை செப்பு குவளைகளிலோ அல்லது பாத்திரத்திலோ ஊற்றிவைக்க நீரிலிருக்கும் தீமை செய்யும் நுண்ணுயிர்கள் நான்கு மணி நேரத்தில் அழிந்துவிடும். இதனை அருந்த உடலில் தீமை செய்யும் பல நுண்ணுயிர்கள் அழிந்து உடலை விட்டு வெளியேறும்.
செப்பு பாத்திரத்தில் சேமித்து வைத்த நீரினைப் பருக உடலில் இருக்கும் கழிவுகளும், நச்சுக்களும் அது வெளியேறும். உடல் தூய்மையாகும்.
செப்புக்கலந்த நீரினால் தண்ணீரில் பரவும் தொற்றுநோய்களும் பரவாது. இதனை அருந்த டைபோய்டு, மலேரியா, டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காக்கலாம்.
இரும்பு சத்தினை உடல் உட்கிரத்துக்கொள்ள அவசியமாகிறது செப்பு தாது. செப்பு தாது குறைபாட்டால் இரத்தசோகை உருவாகிறது.
செப்பு உடலில் உள்ள இரத்த சிகப்பணுக்களை உற்பத்தி செய்ய அவசியமாகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றவும் செய்கிறது. இரத்தத்தை தூய்மையாக்குகிறது.
உடலில் உருவாகும் பலவகையான ஹார்மோன் சுரப்பிகள் சீராக சுரக்க செப்பு அவசியமாகிறது, குறைபாட்டால் பலவகையான சீர்கேடுகள் உருவாகிறது.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வுகளுக்கும், தைராய்டு குறைபாடுகளுக்கும் மாமருந்தாகிறது இந்த செப்பு. உடல் பருமன், தேவையற்ற கொழுப்பு ஆகியவைக்கு செப்பு சிறந்த நிவாரணியாக அமைகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலிக்கு காரணமாகும் சுண்ணாம்பு சத்திற்கும் செப்பு தாது அவசியமாகிறது. மூட்டுவலி, எலும்பு வீக்கம் ஆகிவற்றினை சீராக்கும் செப்பு தாது.
புற்றுநோய் போன்ற உயிரைக்கொல்லும் நோய்களை அழிக்கும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யவும் செப்பு தாது அவசியமாகிறது. தொடர்ந்து செப்பு நீரினை அருந்த புற்றுநோயினை உருவாக்கும் செல்கள் அழிக்கப்படுகிறது.
குழந்தைகளின் கவனக்குறைவு, வயதிற்கு மிஞ்சிய அதிவேகம் இவற்றிக்கு செப்பு குறைபாடே காரணமாகிறது. மேலும் உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்கள், தோலின் ஆரோக்கியம் இவற்றிற்கும் செப்பு தாது காரணமாகிறது. தொடர்ந்து குழந்தைகளுக்கு செப்பு பாத்திரத்தில் சேமித்த நீரினைக் கொடுக்க அவர்களில் மூளைவளர்ச்சியும், அதி வேகமும் சீராகும். உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும்.
குழந்தைப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகைக்கும், அதிக இரும்பு சத்திற்கும் செப்பு நீரே போதுமானது. குழந்தை ஆரோக்கியமாக வளர ஒரு இயற்கையான வழி.
உடலில் ஏற்படும் மரபணு குறைபாட்டிற்கும் சிறந்த நிவாரணம் தரும். செப்பு கலந்த நீர் சிறந்த ஆன்டிஆக்ஸிடெண்டாக இருக்கிறது. கண், தோல் ஆகியவற்றை காக்கிறது.
இவ்வளவு நன்மைகளைக் கொடுக்கும் செப்பு நீரினை எளிதாக செப்பு பாத்திரத்தின் மூலம் பெறலாம்.
அன்றாடம் எவ்வளவு நீர் பருக வேண்டும்
அன்றாடம் ஒரு குவளையில் இரண்டு மணி நேரம் வைத்திருந்த நீரினை ஒருமுறை முறை பருக போதுமானது. அதுவே உடலுக்கு தேவையான செப்பு சத்தினை அளிக்க உதவுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப அளவோடு இதனையும் பருகுவோம்.
செப்பு பத்திரம் பராமரிப்பு
செப்பு பாத்திரத்தை தவறாமல் சீராக பராமரிப்பது அவசியம். ஒவ்வொரு நாளும் அதனை சுத்தப்படுத்தி நன்கு காயவைத்து பயன்படுத்தவேண்டும். புளி, எலுமிச்சை, சாம்பல் கொண்டு அதனை சுத்தப்படுத்தி மீண்டும் பளபளப்பாக பயன்படுத்தலாம்.
பச்சை பிடித்திருக்கும் பத்திரத்தை பயன்படுத்தக்கூடாது.