எண்ணெய் சாப்பிடலாமா?
சமையலுக்கு எந்த எண்ணெயைப் பயன்படுத்துவது?
கொழுப்புச் சத்தைக் குறைக்ககூடிய ஆற்றல் எந்த எண்ணெயில் உள்ளது?
எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?
எண்ணெயை எப்படி பயன் படுத்துவது? என பல பல கேள்விகளுக்கு விடை…
உடலில் உள்ள செல்கள், மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள், மூளையில் உள்ள செல்கள் மற்றும் சுரப்பிகள் (ஹார்மோன்கள்) இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம். கொலஸ்டிரால் தாவர கொழுப்புகளில் நேரடியாக கிடையாது. பல வைட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது. உடலை என்றும் இளமையுடனும், பளபளப்பாகவும், புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள தாவர எண்ணெய் உடலுக்கு மிகவும் அவசியம்.
இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் இரத்தக் குழாய்களிலும் கொழுப்பை சேர்க்காது, தொப்பை ஊளைசதை உருவாகாமல் பாதுகாக்கும். இயற்கையில் பெரும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல வைட்டமின்கள் குறிப்பாக ஆன்டி ஆக்ஸிடன்ட்டான வைட்டமின்-இ, தாது உப்புக்களான இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் முதலானவை உள்ளன. இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று. எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.
ஆனால் இன்று எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை. இரத்த கொதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன் என்று எல்லாவற்றிற்கும் எண்ணெயை குறை சொல்ல தொடங்கிவிட்டோம், காரணம் குறைகள் இன்று இருக்கும் refined மற்றும் double refined (சுத்திகரிக்கப்பட்ட) செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கிடைக்கும் நவீன முறையில் தயாரிக்கும் எண்ணெய்களால்.
இன்றைய காலத்தில் பரவலாக இருக்கும் புற்றுநோய், மூட்டுவலி போன்றவற்றிற்கு இந்தச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவதும் ஒரு காரணம். எண்ணெய்களைச் சுத்திகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்கள் உடல் நலத்தில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துபவை.
Refined Oil
சமையல் எண்ணெயை எப்படிச் சுத்திகரிக்கிறார்கள் என்று பார்த்தால் நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியவரும். இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே சுத்திகரிப்பது ஆகும்.
இதற்கு சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளிச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். இந்த காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றிவிடுகிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கிவிடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்கவே பிளிச்சிங் பவுடர். பின் இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு தெளிவான எந்த மருத்துவகுணமும் இல்லாத வேதிய அமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.
அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த refined oil (refined கடலை எண்ணெய், refined நல்ல எண்ணெய்) என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
மேலும் சுத்திகரிக்கப்பட்ட (refined) எண்ணெயில் தங்கியுள்ள கந்தக அமிலம் மனித உடலில் உள்ள எலும்பைப் பலவீனம் அடையச் செய்துவிடும். உடலில் கலக்கும் இந்த அமிலம் உடலின் திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இறுதியாக அந்தந்த கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தை சேர்க்கின்றனர். இவற்றுடன் மினரல் ஆயில் எனப்படும் ஒருவித எண்ணெயை சேர்க்கின்றனர். பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த முறைகளிலேயே எண்ணெய்யை தயாரிக்கின்றனர்.
இதனால் அல்சர், புற்றுநோய் ஏற்படுகிறது. இப்போது பதினைந்து வயதுள்ள ஒருவரின் முடி நரைத்து விடுகிறது. முடியின் இயற்கை நிறம் மாறிவிடுகிறது. இதனால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுகிறது மற்றும் மூட்டுவலி ஏற்படுகிறது.
பல உள்நாட்டு கம்பெனிகள் பெரிய பெரிய இரும்பு உலக்கைகளை கொண்டு எள்ளை ஆட்டி எண்ணெயை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நல்லெண்ணெயில் மறைந்திருக்கும் சில அதிசயமான குணங்கள் குறைந்து போய்விடும்.
இவ்வாறான விளம்பர வியாபார மாயையில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். மிக எளிய சுலபமான முறையில் நம் முன்னோர் பெற்ற உடல் கட்டமைப்பை இயற்கை முறையில் செக்கில் அட்டிய எண்ணெய்கள் மூலம் பெறமுடியும்.
தேங்காய் எண்ணெய்
நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் (உயிர் சத்துகள்) தான்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள், குளோரோபில், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் போன்றவை இவற்றில் இயற்கையாகவே செக்கில் எண்ணெய்களில் அமைந்திருக்கிறது.
கடலை எண்ணெய்
செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் அது உடலில் தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய்ப்பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது.
விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று.
இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் போய்விடும்.
நல்லெண்ணெய்
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும், கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும் உள்ளது. எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு நிகரே இல்லை, அதனாலேயே இதனை நல்ல எண்ணெய் என்றும் ஆங்கிலத்தில் queen of oil என்றும் அழைக்கின்றனர்.
மூலத் தொந்தரவு, மாதவிலக்குத் தொந்தரவு, மூச்சுக்குழல் பிரச்சனைகள், தோல் தொல்லை முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்ல எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும்.
நல்லெண்ணெய் நோயை முறிக்கும் முறிவு மருந்தாகும். செசாமின் என்ற பொருள் நல்லெண்ணெயில் இருப்பதால், வாதம், இதய நோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. வாழ்க்கையில் வெறுப்பு, கவலை, மனச்சோர்வு முதலியவற்றைத் தடுக்கும் பைரோரெஸினால் என்ற அமிலப் பொருளும் நல்லெண்ணெயில் இருக்கிறது.