சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி இருக்கும். இதற்கு மிக முக்கியக் காரணம் சில அதிக நச்சுக்கள் உடலில் சேருவதும், சத்து குறைபாடு மற்றும் உயிர் சத்துக்கள் குறைபாடும். இன்று இந்த தொந்தரவு அதிகரித்ததற்கு மற்றொரு காரணம் இயற்கை காற்றை பெறுவதில்லை என்பது. இரவு அடைக்கப்பட்ட அறையில் உறக்கம், பகலில் அடைக்கப்பட்ட அலுவலகத்தில் செயற்கை காற்று என வாழ்க்கை நகர்வது தொடர் தலைவலி ஏற்பட மிக முக்கிய காரணமாகிறது. இந்த தொந்தரவிலிருந்து வெளிவர சில எளிய வழிகளையும், உணவுகளையும் பார்ப்போம்.
- நச்சுக்கள் கலக்காத உணவுகளை உட்கொள்வது அவசியம். நச்சுக்கள் என்பது இரசாயனங்கள் கலந்த உணவுகள். அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகள், பொட்டலங்களில் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் உணவுகள், இரசாயன சுவையூட்டிகள், மணமூட்டிகள், நிறமூட்டிகள் கலந்த உணவுகள், உயர் சத்துக்கள் அற்ற உணவுகள் போன்றவை ஆகும். மேலும் இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் கலந்த உணவுகளையும் தவிர்ப்பது சிறந்தது.
- பாரம்பரிய உணவுகளை உட்கொள்வது, பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். வாரத்தில் ஒருநாள் இயற்கை உணவுகளை குறிப்பாக பழங்களை மட்டும் எடுத்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
- திருநீற்றுப் பச்சிலை போன்ற மூலிகைகளை சுவாசிப்பதும் சிறந்த பலனை கொடுக்கும்.
- அதிகாலையில் எழுவதும், காலை சூரிய ஒளியில் சில நேரம் சுவாசப் பயிற்சி செய்வதும் விரைவில் இந்த தொடர் தலை தலைவலியிலிருந்து விடுதலை அளிக்கும்.
- காலையில் மண்பானை நீர் அருந்துவது நல்ல பலனை அளிக்கும்.
- காலையில் ஒரு ஆப்பிள் பழத்தை துண்டுகளாக நறுக்கி அதனை உப்பு தொட்டு உண்டுவர ஒருவாரத்தில் நீண்டநாள் இருக்கும் தொடர் தலைவலி பறந்தோடும். ஆப்பிளில் உள்ள சில அமிலங்கள் தலைவலியைப் போக்குவது மட்டுமல்லாமல் குடல், கல்லீரல், மூளை ஆகியவற்றை சாந்தப்படுத்தி சீராக செயல்பட உதவுகிறது. தொடர்ந்து ஒருமாதம் இவ்வாறு அப்பிளை உண்டுவர எப்பேர்ப்பட்ட அனைத்து விதமான தொடர் தலைவலியும் தீரும்.
தொடர் தலைவலியை அலட்சியம் செய்யாமல் சிறந்த சிகிச்சையை அளிக்கவேண்டும். இல்லையென்றால் அது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சாதாரணமாக வரும் தலைவலி, தலை சுற்றல், தலை பாரம் நீங்க இங்கு இணையவும்.