நோய்கள் அண்டாமல் இருக்க
வசம்பை சுட்டு கரியாக்கி அந்த தூளை அன்றாடம் குளித்து பின் காலின் அடியில் தொப்புளை சுற்றி தடவிவர எந்த நோயும் அண்டாது.
குழந்தைகளின் உடல் தேற
பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது கொடுக்க வேண்டும். பாகற்காய், சுண்டைக்காய், வேப்பங் கொழுந்து ஆகியவற்றை ஏதேனும் ஒரு வழியில் அவ்வப்பொழுது குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று புழு பூச்சிகள் அழியும். குழந்தைகளின் உடல் தேறும்.
வயிற்றுப்புண்
அம்மான் பச்சரிசி கீரையை சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்புண் ஆறும்.
வாய்ப்புண்
மாசிக்காயை அரைத்து தாய்ப்பாலில் கலந்து வாயில் புண் உள்ள இடத்தில் தடவ வாய்ப்புண் மறையும்.
நாக்குபூச்சி வெளியேற
மாங்கொட்டை பருப்பை உலர்த்தி வைத்துக்கொண்டு அதனை தூளாக்கி தேன் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சி வெளியேறும்.
மலச்சிக்கல் தீர
காய்ந்த திராட்சையை பசும்பாலில் ஊறவைத்து அரைமணி நேரத்திற்குப் பின் பிழிந்து சாறை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க மலச்சிக்கல் தீரும்.
ஆசன வாய் குடைச்சல் விலக
பாகல் இலையின் சாறை எடுத்து நான்கைந்து சொட்டு ஆசன வாயில் விட குடைச்சல் உடனே நிற்கும்.
மந்தம் குறைய
சில குழந்தைகள் மந்தமாக அவ்வப் பொழுது வாந்தி எடுப்பதும், கொட்டாவி விடுவதுமாக இருப்பார்கள் அதற்கு பூண்டுடன் ஓமம் பொடி சேர்த்து நீரில் கொதிக்கவைத்து பாதியாக சுண்டியதும் அந்த கசாயத்தை கொடுக்க மந்தம் குறையும்.
கண் சூடு தனிய
சில குழந்தைகளுக்கு கண்களில் அதிக சூடு தெரியும், அதற்கு நெல்லிக்காயினை சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர விரைவில் கண்சூடு மறையும்.
சாம்பல், மண் தின்னும் குழந்தைகளுக்கு
துளசி இலை, கடுக்காய் தோல், கீழாநெல்லி வேர், ஓமம், மிளகு ஆகியவற்றை மைய அரைத்து சிறிதளவு மோரில் கலந்து காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் குழந்தைகளுக்கு கொடுக்க மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை குழந்தைகள் விட்டுவிடுவார்கள்.
கெட்டிக்கார குழந்தைகளைப் பெற
வசம்பு, ஓமம், இந்துப்பு, மஞ்சள், அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு ஆகியவற்றை தூள் செய்து சம அளவு கலந்து வைத்துக் கொண்டு, தினசரி ஒரு சிட்டிகை அளவு எடுத்து பசு நெய்யில் கலந்து காலை வேளையில் நாக்கில் தடவிவர குழந்தைகள் கெட்டிக்கார குழந்தைகளாகிவிடுவார்கள்.