வணங்களுக்கும் நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உண்டு. வண்ணக் கண்ணாடிகள் வழியாக நோயாளிகள் மேல் ஒளியைப் பாய்ச்சுதல், குடிநீரில் வண்ணத்தைக் கலத்தல், திரவங்களைக் குறிப்பிட்ட வண்ண பாட்டிலில் அருந்துதல். குறிப்பிட்ட வண்ணம் உள்ள உணவுப் பொருட்களை உண்ணல் போன்ற முறைகளில் வண்ண சிகிச்சை எனும் கலர் தெரபி சிகிச்சை நிபுணர்கள் பல நோயாளிகளைக் குணப்படுத்தி உள்ளனர்.
கீழ்க்கண்ட 8 வண்ணங்களை மேற்கண்ட முறைகளில் சிலவற்றை நோயாளிகளில் மேல் வண்ண நெருக்கத்தை ஏற்படுத்தி நோய்களை சிகிச்சை நிபுணர்கள் குணப்படுத்துகின்றனர்.
சிவப்பு
இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இரத்த ஓட்டத்தைத் தடையாக்கும் நோய்கள், நிணநீர்க் குழாய் நோய்கள், இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், பக்கவாதம் இவற்றைக் குணப்படுத்தலாம்.
ஆரஞ்சு
நாடித்துடிப்பை மிகுவிக்கும். மகப்பேறுள்ள தாய்மார்களுக்கு நிறைய பால் சுரக்க செய்யும். குடல் சரிவு (Hernia), குடல்வால் வீக்கம் (Appendicities), சிறுநீர்ப்பையில் கற்கள், கீழ் வயிற்றுப் பகுதி சம்பந்தப்பட்ட நோய்கள் இவற்றைச் சரியாக்கலாம்.
மஞ்சள்
சர்க்கரை நோய், அஜீரணம், சிறுநீரக இரைப்பைக் கோளாறுகள், மலச்சிக்கல், தொண்டை நோய் இவற்றை நீக்கலாம்.
பச்சை
நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், குடற்புண் (அல்சர்), மலேரியா இன்புளுவென்சா, ஜலதோஷம், தலை வலி, உணர்வு வயப்பட்ட குழப்ப நிலையை சாந்தப்படுத்தி இரத்த ஓட்டம், இருதய நோய்களைக் குணப்படுத்தும்.
நீலம்
தோல் நோய்கள், சுவாசம் தொடர்பான நோய்கள், ருமாடிசம், மலேரியா, நரம்புத் தளர்ச்சி, படபடப்பு, வலி குறைக்கும். இரத்தம் வருவதைக் கட்டுப்படுத்தும். தீப்புண், வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.
கருநீலம்
காது மந்தம், பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள், கண் படலம் (Cataract), ஒற்றை தலைவலி, கண், காது, நரம்பு மண்டலம் இவற்றை இதமாக்கும்.
ஊதா
பிரசவ வேதனையைக் குறைக்கும். நரம்பு, உணர்வு குழப்பங்கள், ஆர்தரைட்டிஸ் இவற்றை குணப்படுத்தலாம். பச்சை, மஞ்சளுடன் சேர்த்து தொடக்க நிலையை தோல் புற்றுநோயை குணமாக்கலாம்.
மஜெந்தா
மனக்குழப்பம், உடல் மன ரீதியான கட்டிப்போட்ட நிலை, அவநம்பிக்கை சில இருதய நோய்கள் மன நோய்கள் இவற்றை குணப்படுத்தலாம்.