குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் வரும் ஒரு நோய் அம்மை நோய். உடலெங்கும் முத்துமுத்தாக நீர் கோர்த்து பின் நீங்க அங்கெல்லாம் காய்ந்த பின்னும் தழும்புகள் மறையாமல் இருக்கும். இந்த வடுக்களால் முக அழகே போய்விடும். அதனால் இந்த அம்மை தழும்பு மறைய சில இயற்கை வழிகளை மேற்கொள்ளலாம். இவற்றால் மிக விரைவிலேயே தழும்புகளை நீக்க முடியும்.
முதலில் அம்மை நோய் பரவும் காலத்தில் நம்மை நாம் தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம். அம்மை நோய் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள வெந்தையம் அதிக பயனளிக்கும் ஒன்று. வெந்தயத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் நான்கைந்து மிளகை தட்டிப் போட்டு நீர்விட்டுக் காய்ச்சி ஒரு கசயமாக காலை மாலை என மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட அம்மை வராமல் அது பரவும் காலத்தில் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அம்மை தழும்பு மறைய
- குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி அரை மணி நேரம் வைக்க விரைவில் தழும்பு மறையும்.
- கசகசாவை அரைத்து பூசலாம்.
- கருவேப்பிலை, கசகசா, கஸ்துரி மஞ்சள் சேர்த்து நன்கு மைய அரைத்து தழும்புகள் மீது பூசி குளித்து வர தழும்புகள் விரைவில் மறையும்.
- மூலிகை குளியல் பொடியை பயன்படுத்த சருமம் பளபளக்கும், தழும்புகள் மறையும்.