செட்டிநாடு வெள்ளை பணியாரம் / Chettinad Vellai Paniyaram

உலகப்புகழ் செட்டிநாட்டு பலகாரங்களில் பெயர்போன பலகாரம் இந்த வெள்ளை பணியாரம். சாதுவாக சாத்வீகமாக இருக்கும் இந்த பணியாரத்தை ஒருமுறை சுவைத்தால் நாவில் என்றும் சுவை இருக்குமளவிற்கு சுவையான உணவு. காலை சிற்றுண்டியுடனும் மாலை பலகாரமாகவும் உட்கொள்ள சிறந்தது. பாரம்பரிய தூயமல்லி அரிசியைக் கொண்டு இதனை தயாரித்து உண்ண சுவையுடன் சத்துக்களும் பலமடங்கு அதிகரிக்கும்.

தூயமல்லி அரிசியைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் மருத்துவகுணங்களை தெரிந்துக்கொள்ள – தூயமல்லி அரிசி / Thooyamalli Rice Benefits and Uses. மேலும் மற்ற பாரம்பரிய அரிசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள – பாரம்பரிய அரிசிகள் / Tamil Nadu Traditional Rices.

தேவையான பொருட்கள்

  • 1 கப் தூயமல்லி பச்சரிசி (குவியலாக எடுக்காமல் சமமாக எடுக்க வேண்டும் , தூயமல்லி அரிசியில் பச்சரிசியாக இருக்கவேண்டும்.)
  • 2 – 3 ஸ்பூன் உளுந்து (பொதுவாக அரிசிக்கு மேல் குவியலாக உளுந்தை வைக்க எவ்வளவு நிற்கிறதோ அதுவே அளவு)
  • செக்கு கடலை எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு (பொதுவாக வெள்ளை பணியாரத்திற்கு சற்று உப்பு குறைவாக சேர்ப்பது சிறந்தது)

செய்முறை

  • இந்த பணியாரம் செய்ய நான் தூயமல்லி பச்சரிசியை பயன்படுத்துகிறேன். செட்டிநாடு பகுதியில் கிடைக்கும் பணியார அரிசியை பயன்படுத்தலாம்.
  • தூயமல்லி அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து நன்கு சுத்தம் செய்து கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும்.
  • பிறகு சிறிது உப்பு சேர்த்து மைய அரைக்க வேண்டும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்).
  • அடி தட்டையாக இருக்கும் இரும்பு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை எண்ணெயில் ஊற்றவும்.

  • ஒவ்வொரு முறையும் மாவை நன்கு கலக்கி விட்டபின் ஒவ்வொன்றாக மட்டுமே சுட்டெடுக்கவும்.
  • மாவிற்கு மேல் சுற்றி இருக்கும் எண்ணெயை ஊற்றவும்.
  • ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபது நொடியில் எண்ணெயை விட்டு பணியாரங்களை எடுக்கவும்.

  • குறிப்பு : அரைத்த மாவு புளிக்கக் கூடாது. இதற்கு கார சட்னி அல்லது தக்காளி வரமிளகாய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
  • வெள்ளை நிறம் மாறாத அளவிற்கு வெந்ததும் எடுத்துவிடவேண்டும்.
  • இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.
  • சுவையான செட்டிநாட்டு ஸ்பெஷல் வெள்ளை பணியாரம் தயார்.
  • பாரம்பரிய அரிசி தூயமல்லியில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

  • பணியாரங்களை சுட்ட பின் சற்று ஆறியதும் உட்பகுதியில் மாவில்லாமல் நன்கு வெந்துள்ளதா என உறுதி செய்துக் கொள்ளவேண்டும்.
  • மாவு சற்று கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பணியாரம் எண்ணெய் குடிப்பதாக தோன்றினால் உளுந்து கூடி விட்டது அல்லது நயமான உளுந்தாக இருக்கும். இதற்கு சிறிது இட்லி மாவு அல்லது பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
5 from 1 vote

தூயமல்லி அரிசி வெள்ளை பணியாரம்

உலகப்புகழ் செட்டிநாட்டு பலகாரங்களில் பெயர்போன பலகாரம் இந்த வெள்ளை பணியாரம். சாதுவாக சாத்வீகமாக இருக்கும் இந்த பணியாரத்தை ஒருமுறை சுவைத்தால் நாவில் என்றும் சுவை இருக்குமளவிற்கு சுவையான உணவு. காலை சிற்றுண்டியுடனும் மாலை பலகாரமாகவும் உட்கொள்ள சிறந்தது. பாரம்பரிய தூயமல்லி அரிசியைக் கொண்டு இதனை தயாரித்து உண்ண சுவையுடன் சத்துக்களும் பலமடங்கு அதிகரிக்கும்.
ஆயத்த நேரம் : – 2 hours
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 2 hours 15 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • 1 கப் தூயமல்லி பச்சரிசி ((குவியலாக எடுக்காமல் சமமாக எடுக்க வேண்டும் , தூயமல்லி அரிசியில் பச்சரிசியாக இருக்கவேண்டும்.) )
  • 2 -3 ஸ்பூன் உளுந்து ((பொதுவாக அரிசிக்கு மேல் குவியலாக உளுந்தை வைக்க எவ்வளவு நிற்கிறதோ அதுவே அளவு))
  • செக்கு கடலை எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு ((பொதுவாக வெள்ளை பணியாரத்திற்கு சற்று உப்பு குறைவாக சேர்ப்பது சிறந்தது))

செய்முறை

  • தூயமல்லி அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து நன்கு சுத்தம் செய்து கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும்.
  • பிறகு சிறிது உப்பு சேர்த்து மைய அரைக்க வேண்டும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்).
  • அடி தட்டையாக இருக்கும் இரும்பு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை எண்ணெயில் ஊற்றவும்.
  • ஒவ்வொரு முறையும் மாவை நன்கு கலக்கி விட்டபின் ஒவ்வொன்றாக மட்டுமே சுட்டெடுக்கவும்.
  • மாவிற்கு மேல் சுற்றி இருக்கும் எண்ணெயை ஊற்றவும்.
  • ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபது நொடியில் எண்ணெயை விட்டு பணியாரங்களை எடுக்கவும்.
  • சுவையான செட்டிநாட்டு ஸ்பெஷல் வெள்ளை பணியாரம் தயார்.
  • குறிப்பு : அரைத்த மாவு புளிக்கக் கூடாது. இதற்கு கார சட்னி அல்லது தக்காளி வரமிளகாய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
  • வெள்ளை நிறம் மாறாத அளவிற்கு வெந்ததும் எடுத்துவிடவேண்டும்.
  • இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.
  • பாரம்பரிய அரிசி தூயமல்லியில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.
  • பணியாரங்களை சுட்ட பின் சற்று ஆறியதும் உட்பகுதியில் மாவில்லாமல் நன்கு வெந்துள்ளதா என உறுதி செய்துக் கொள்ளவேண்டும்.
  • மாவு சற்று கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம்.
  • ணியாரம் எண்ணெய் குடிப்பதாக தோன்றினால் உளுந்து கூடி விட்டது அல்லது நயமான உளுந்தாக இருக்கும். இதற்கு சிறிது இட்லி மாவு அல்லது பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

1 thought on “செட்டிநாடு வெள்ளை பணியாரம் / Chettinad Vellai Paniyaram

Comments are closed.