செட்டிநாடு சீப்பு சீடை

நல்ல ஒரு சுவையான செட்டிநாடு திண்பண்டம் இந்த சீப்பு சீடை. விசேசங்களுக்கு குறிப்பாக தீபாவளி முதல் நாள் இதனை செய்து வைக்க வேகமாக தீர்ந்துவிடும். அவ்வளவு சுவையான ஒன்று இந்த சீப்பு சீடை. அதிலும் குழந்தைகள் இதனை கைகளில் பத்து விரல்களிலும் மாட்டிக்கொண்டு ஒவ்வொன்றாக உண்ணும் சுவையே அழகுதான்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி (நான் தூயமல்லி பச்சரிசியை எடுத்துக் கொள்கிறேன்.)
  • ¼ கப் உளுந்து
  • 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  • ¾ கப் தேங்காய்ப்பால்
  • 2 ஸ்பூன் வெண்ணை அல்லது நெய்
  • உப்பு
  • பொரிக்க கடலை எண்ணெய்

செய்முறை

  • முதலில் தூயமல்லி அரிசியை நன்கு கழுவி விட்டு அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உளுந்தை லேசாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து வாசனை வந்தவுடன் எடுத்துவிடவேண்டும் நன்கு சிவக்க வறுக்கக் கூடாது.

  • பொட்டுக்கடலையை லேசாக வெதுப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த பாத்திரத்தில் இருக்கும் சூட்டில் போட்டாலே போதும்.
  • சற்று ஆறியதும் மிக்ஸியில் உளுந்தை முதலில் நன்கு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் பொட்டுக் கடலையையும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
  • அரைத்த இந்த உளுந்து, பொட்டு கடலை மாவை நன்கு நைசான சல்லடையில் சலித்துக் கொள்ள வேண்டும்.

  • ஊறவைத்த அரிசியை நிழல் காய்ச்சலில் ஒரு மணி நேரம் ஒரு துணியில் பரப்பி உலர்த்த வேண்டும். அரிசியில் ஈரப்பதம் இருக்க வேண்டும் ஆனால் தண்ணீர் இருக்கக் கூடாது. கையால் பிடித்தால் அரிசி ஒட்டிக்கொள்ளும் பக்குவத்தில் மிக்ஸியில் நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
  • பொடித்த இந்த அரிசி மாவை நைசான சல்லடையில் சலித்துக் கொள்ள வேண்டும்.

  • இந்த மாவை லேசாக அடுப்பில் வறுத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். மாவு சிவக்கக் கூடாது, கை பொறுக்கும் சூடு ஏறியவுடன் எடுத்துவிடவேண்டும்.
  • இவ்வாறு அரிசியை ஊறவைத்து, உலர்த்தி, அரைத்து சலித்த இடியாப்பம் மாவு இருந்தால் அதையே எடுத்துக்கொள்ளலாம்.
  • இந்த மாவை மீண்டும் சலித்துக் கொள்ளவேண்டும்.
  • பின் இந்த அரிசி மாவு அல்லது இடியாப்ப மாவுடன் வறுத்து சலித்து வைத்திருக்கும் உளுந்து, பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

  • தேங்காய்ப் பாலை லேசாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். தேங்காய்ப் பால் கொதிக்கக் கூடாது.
  • தேவையான அளவு உப்பு, நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இவற்றுடன் லேசாக சூடு செய்யப்பட்ட தேங்காய் பாலையும் சேர்த்து நன்கு கிளறி பிசைந்து கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் சாதாரண தண்ணீர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.

  • மாவு இறுக்கமாக கெட்டியாகவும் இருக்கக் கூடாது, தளதளவென்று இளக்கமாகவும் இருக்கக் கூடாது. கையில் நன்கு உருண்டு ஒட்டாமல் வரவேண்டும்.
  • பின் சீப்பு சீடை கட்டையை தயாராக எடுத்துக் கொண்டு அதில் லேசாக எண்ணெய் தடவி இந்த மாவை வைத்து நீள நீளமாக ஒரு தட்டில் அல்லது ஒரு துணியில் பிழிந்து கொள்ள வேண்டும்.
  • நான்கைந்து முறை பிழிந்த பின் ஒரே அளவில் சிறிதாக மாவை ஒரு கத்தியைக் கொண்டு நறுக்கிக் கொண்டு அவற்றை கைகளால் சுற்றி ஓரங்களை அழுத்திவிடவேண்டும்.

  • ஓரங்கள் கனமாகாமல் மடிக்க விடவேண்டும். பின் சுற்றிய ஒவ்வொன்றையில் தனித் தனியாக ஒட்டாமல் வைத்துக் கொள்ளவேண்டும்.
  • ஒரு வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து சிறிது சிறிதாக சுற்றிய சீப்பு சீடை மாவை எண்ணெயில் சேர்க்க வேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.

  • அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருக்கக் கூடாது. சிவக்க விடாமல் எல்லா பக்கமும் வேகவைத்து எண்ணெய் அடங்கியதும் எடுக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் செட்டிநாடு சீப்பு சீடை தயார்.

5 from 1 vote

செட்டிநாடு சீப்பு சீடை

நல்ல ஒரு சுவையான செட்டிநாடு திண்பண்டம் இந்த சீப்பு சீடை. விசேசங்களுக்கு குறிப்பாக தீபாவளி முதல் நாள் இதனை செய்து வைக்க வேகமாக தீர்ந்துவிடும். அவ்வளவு சுவையான ஒன்று இந்த சீப்பு சீடை. அதிலும் குழந்தைகள் இதனை கைகளில் பத்து விரல்களிலும் மாட்டிக்கொண்டு ஒவ்வொன்றாக உண்ணும் சுவையே அழகுதான்.
Snack
Indian
chettinad snacks, seepu seedai
ஆயத்த நேரம் : – 1 hour
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 1 hour 10 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி ((மாவு பச்சரிசி))
  • ¼ கப் உளுந்து
  • 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  • ¾ கப் தேங்காய்ப்பால்
  • 2 ஸ்பூன் வெண்ணை அல்லது நெய்
  • உப்பு
  • பொரிக்க கடலை எண்ணெய்

செய்முறை

  • முதலில் அரிசியை நன்கு கழுவி விட்டு அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உளுந்தை லேசாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து வாசனை வந்தவுடன் எடுத்துவிடவேண்டும் நன்கு சிவக்க வறுக்கக் கூடாது.
  • பொட்டுக்கடலையை லேசாக வெதுப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த பாத்திரத்தில் இருக்கும் சூட்டில் போட்டாலே போதும்.
  • சற்று ஆறியதும் மிக்ஸியில் உளுந்தை முதலில் நன்கு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் பொட்டுக் கடலையையும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
  • அரைத்த இந்த உளுந்து, பொட்டு கடலை மாவை நன்கு நைசான சல்லடையில் சலித்துக் கொள்ள வேண்டும்.
  • ஊறவைத்த அரிசியை நிழல் காய்ச்சலில் ஒரு மணி நேரம் ஒரு துணியில் பரப்பி உலர்த்த வேண்டும். அரிசியில் ஈரப்பதம் இருக்க வேண்டும் ஆனால் தண்ணீர் இருக்கக் கூடாது. கையால் பிடித்தால் அரிசி ஒட்டிக்கொள்ளும் பக்குவத்தில் மிக்ஸியில் நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
  • பொடித்த இந்த அரிசி மாவை நைசான சல்லடையில் சலித்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த மாவை லேசாக அடுப்பில் வறுத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். மாவு சிவக்கக் கூடாது, கை பொறுக்கும் சூடு ஏறியவுடன் எடுத்துவிடவேண்டும்.
  • இவ்வாறு அரிசியை ஊறவைத்து, உலர்த்தி, அரைத்து சலித்த இடியாப்பம் மாவு இருந்தால் அதையே எடுத்துக்கொள்ளலாம்.
  • இந்த மாவை மீண்டும் சலித்துக் கொள்ளவேண்டும்.
  • பின் இந்த அரிசி மாவு அல்லது இடியாப்ப மாவுடன் வறுத்து சலித்து வைத்திருக்கும் உளுந்து, பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
  • தேங்காய்ப் பாலை லேசாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். தேங்காய்ப் பால் கொதிக்கக் கூடாது.
  • தேவையான அளவு உப்பு, நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இவற்றுடன் லேசாக சூடு செய்யப்பட்ட தேங்காய் பாலையும் சேர்த்து நன்கு கிளறி பிசைந்து கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் சாதாரண தண்ணீர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • மாவு இறுக்கமாக கெட்டியாகவும் இருக்கக் கூடாது, தளதளவென்று இளக்கமாகவும் இருக்கக் கூடாது. கையில் நன்கு உருண்டு ஒட்டாமல் வரவேண்டும்.
  • பின் சீப்பு சீடை கட்டையை தயாராக எடுத்துக் கொண்டு அதில் லேசாக எண்ணெய் தடவி இந்த மாவை வைத்து நீள நீளமாக ஒரு தட்டில் அல்லது ஒரு துணியில் பிழிந்து கொள்ள வேண்டும்.
  • நான்கைந்து முறை பிழிந்த பின் ஒரே அளவில் சிறிதாக மாவை ஒரு கத்தியைக் கொண்டு நறுக்கிக் கொண்டு அவற்றை கைகளால் சுற்றி ஓரங்களை அழுத்திவிடவேண்டும்.
  • ஓரங்கள் கனமாகாமல் மடிக்க விடவேண்டும். பின் சுற்றிய ஒவ்வொன்றையில் தனித் தனியாக ஒட்டாமல் வைத்துக் கொள்ளவேண்டும்.
  • ஒரு வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து சிறிது சிறிதாக சுற்றிய சீப்பு சீடை மாவை எண்ணெயில் சேர்க்க வேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.
  • அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருக்கக் கூடாது. சிவக்க விடாமல் எல்லா பக்கமும் வேகவைத்து எண்ணெய் அடங்கியதும் எடுக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் செட்டிநாடு சீப்பு சீடை தயார்.

1 thought on “செட்டிநாடு சீப்பு சீடை

  1. Kanaka

    5 stars
    Remembering olden days

Comments are closed.