குத்துப் பசலைக் கீரையை பொதுவாக சிலோன் பசலை கீரை என அழைப்பதுண்டு. இதுவும் பசலைக் கீரை வகையைச் சேர்ந்தது, இதில் கொடிப்பசலை கீரை, குத்துப்பசலைக் கீரை என வகைகள் உண்டு. இதில்]\கொத்துப் பசலை கீரை சிறுசிறு கொத்தாக வளரும் கீரை. மானாவாரியாக விவசாய நிலங்களில் பார்க்கமுடியும். அதுமட்டுமில்லாமல் இதனை விளையவைத்தும் சந்தைகளில் விற்பதுண்டு. நகரங்களில் இதனை பருப்பு கீரை என்றும் சில பகுதிகளில் அழைப்பதுண்டு. இது வறட்சியை தாங்கி வளரும் கீரை. பாசன வசதி இருக்குமிடத்தில் நன்கு செழிப்பாக வேகமாக வளரும் கீரை. இந்த கீரையின் தண்டை கிள்ளி நட்டலேபோதும் நன்கு தழைத்து வளரக் கூடியது.
சிலோன் பசலை கீரையின் பயன்கள்
- இந்த கொத்து பசலைக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கக் கூடியது.
- மலச்சிக்கலை முற்றிலும் ஒழிக்கக் கூடிய கீரை.
- உடல் கழிவுகளை நீக்கக் கூடியது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கீரை.
- இரத்த சோகையை நீக்கக் கூடியது. இளைத்த உடலை தேற்றிடவும் இந்த கீரை உதவுகிறது.
- சிறுநீரக கல்லடைப்பை நீக்கும்.
- நீரிழிவுள்ளவர்களுக்கு சிறந்தது.
- கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சிறந்தது.
- தாய்ப்பால் சுரக்க உதவும்.
- மூட்டு வலிக்கு சிறந்தது.
இந்த சிலோன் பசலை கீரையை துவரம் பருப்பு அல்லது பாசிப் பயறு சேர்த்து கூட்டாக தயாரித்து உண்ணலாம். சிறிது சிறிதாக அரிந்து வேக வைத்து பொரியலும் செய்யலாம். தொடர்ந்து உணவில் சேர்த்து வர நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும், பல நோய்களைத் தடுக்கவும் உதவக் கூடிய ஒரு அற்புதமான கீரை.
ஊட்டச்சத்துக்களும் தாதுச் சத்துக்களும் மிகுதியாக உள்ளது கீரை. ரத்தத்தை விருத்தி செய்து உடலுக்கு அழகைத் தரக்கூடிய ஒரு கீரை. இதனை தொடர்ந்து உண்பதால் மூத்திர கடுப்பு, நீர் கடுப்பு, வலி போன்ற நோய்கள் நீங்கும்.
சிலோன் பசலை கீரை ஊட்டச்சத்துக்கள்
ஊட்டச் சத்து (100 கிராம் கீரைகள்)
- புரதம் – 1.7 கிராம்
- கொழுப்பு – 0 4 கிராம்
- மாவுச்சத்துக்கள் – 7.9 கிராம்
- நீர்ச்சத்து – 86 கிராம்
- தாது உப்பு – 1.8 கிராம்
- நார்ச்சத்து – 2.2 கிராம்
- சுண்ணாம்புச் சத்து – 148 மில்லி கிராம்
- கந்தகச் சத்து – 25 மில்லிகிராம்
- இரும்புச் சத்து – 58.2 மில்லிகிராம்