Category: ஆரோக்கிய குறிப்புகள்

உணவு / ஆரோக்கிய பழமொழிகள் – 2

தேனும் தினை மாவும் தேவர்க்கு அமிர்தம்.வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.அன்னம் அடங்கினால் ஐந்தும் ஒடுங்கும்.

உணவு / ஆரோக்கிய பழமொழிகள் – 1

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

பலா உத்தமம், மா மத்திமம், பாதிரி அதமம்.

உடம்பைக் கடம்பாலே அடி.

கத்தரிக்காய்க்கு காம்பு ருசி, வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

தமிழ் பழமொழி – 16

அழையாத வீட்டு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது. அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

தமிழ் பழமொழி – 15

தர்மத்தினால் வந்தது தர்மத்தினால் போக வேண்டும்.ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.எட்டு எள்ளுக்கு சொட்டு எண்ணெய் எடுப்பான்.ஆடு பிடிக்கப் போய்

தமிழ் பழமொழி – 14

வேட்டைக்கு ஆகாத நாய் வீரம் பேசியதைப் போல.

மூன்று பல்லும் போனவருக்கு முறுக்குக் கடையில் என்ன வேலை?

முத்திலும் சொத்தை உண்டு, பவளத்திலும் பழுது உண்டு.

மத்து இட்ட தயிர் போலப் புத்தி குழம்புகிறது.

தமிழ் பழமொழி – 13

ஈயத்தைப் புடம் போட்டால் வெள்ளி ஆகுமா?ஏறுகிற குதிரைக்கு எருதே மேல்.காண்பாரைக் கண்டு கழுதையும் பரதேசம் போயிற்றாம்.கைவரிசை இருந்தாலும்