முந்திரி மரம் – நம் மூலிகை அறிவோம்

Cashew Nut Tree

பரந்து, உயர்வாகவும் அடர்த்தியாகவும் வளர கூடிய ஒரு மரம் முந்திரி மரம். இதன் பருப்பை உணவு வகைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்துவது உண்டு. பலவிதமான சத்துக்களையும், பயன்களையும் கொண்டது முந்திரி பருப்பு. அதேப்போல் முந்திரி மரத்திற்கும் நோயை குணப்படுத்தும் சக்தி உள்ளது. நீரிழிவு வியாதிக்கு மிக சிறந்த மருந்தாக இந்த முந்திரி மரம் உள்ளது. இந்த மரத்தின் பட்டை வேர் ஆகியவை சிறந்த மருத்துவப் பயனுடையதாக உள்ளது.

நீரிழிவு குணமாக

முந்திரி மரத்தின் வேர் பட்டையை வெட்டிக் கொண்டு வந்து 30 கிராம் எடை எடுத்து அதை உரலில் போட்டு இடித்து ஒரு சட்டியில் போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி அதை இரண்டு பங்குகளாக செய்து வேளைக்கு ஒரு பங்கு வீதம் காலை மாலையாக தொடர்ந்து 40 நாட்கள் உண்டு வர ஆச்சரியமாக நீரிழிவு நோய் மறையும். இடைவிடாமல் 40 நாட்கள் சாப்பிட வேண்டும்.