கேரட் கீரை – நம் கீரை அறிவோம்

கேரட்டின் மேற்புறம் இருக்கும் கீரையே கேரட் கீரை. சாதாரணமாக இதை நாம் சந்தைகளில் பார்க்க முடியாது. குளிர் பிரதேசங்களில் இந்த கீரை கிடைப்பதுண்டு. அதேப்போல் வீட்டு தோட்டத்தில் கேரட் வளர்ப்பவர்களுக்கும் இந்தக் கீரை கிடைக்கும். இந்த கீரையில் ஐம்பது சதவீதம் உண்ணும் தகுதி கொண்டவை. சிறிது கசப்பு சுவையை கொண்ட கீரை அதனால் முற்றிய கீரைகளை தவிர்த்து இளங் கீரைகளை பயன்படுத்துவது சிறந்தது. பல பல சத்துக்களை கொண்ட கீரை, மற்ற கீரைகளுடன் சேர்த்து சமைப்பது அல்லாது தேங்காய் சேர்த்து செய்வது நல்ல சுவையையும் சத்துக்களையும் அளிக்கும்.

காரட் கீரையில் மூன்றில் ஒரு பங்கு நீரும், சிறிது அளவு புரதமும், கொழுப்புச் சத்தும், தாது உப்புகள், நார்ச்சத்து, மாவுச்சத்து உள்ளது. கேரட் கீரை 80 கலோரி வெப்ப ஆற்றலைக் அளிக்கக் கூடியது. மேலும் இந்த கீரையில் சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. இந்த கீரையில் உயிர் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. உயிர்ச்சத்துக்களில் ஒன்றான வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது.

முடக்குவாதத்திற்கு ஒரு சிறந்த மருந்து

முடக்குவாதத்திற்கு கேரட் கீரை நல்ல மருந்தாகவும் பயன்படக் கூடியது. இந்த கீரை முடக்குவாதத்திற்கு ஒரு சிறந்த மருந்தாகும். முடக்குவாதத்திற்கு உட்பட்டவர்களின் உடலிலுள்ள நோய் பாதிப்புக்கு ஆளாகாத உடல் உறுப்புகளை இக்கீரை வலுப்படுத்தும்.

இரத்த நச்சை அகற்றும்

இரத்த விருத்தியில் இந்த கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை எதிர்க்கும் ஆற்றல் இந்த கீரைக்கு உண்டு.

கருப்பைக்கு

பிரசவத்திற்குப் பிறகு கருப்பை சுருங்க வைக்கும் தன்மையும் கொண்டது இந்த காரட் கீரை. இந்த காரட் கீரையின் கசாயத்தை பருக விரைவில் சுருங்கும். வயிற்றில் ஏற்படும் புண்களுக்கு கேரட் கீரை மிகச்சிறந்த ஒரு மருந்தாகும்.

பற்களுக்கு காரட் கீரை

கேரட் கீரையை பச்சையாக வாயிலிட்டு மென்று பல் துலக்க பல் ஈறுகளுக்கு வலுவூட்டும். பூத்த நிலையில் உள்ள முதிர்ந்த காரட் கீரையின் தண்டுகளை பல் துலக்கும் பல் குச்சிகளாக பயன்படுத்தலாம். பற்களுக்கு வலுவூட்டும், பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, ஈறு வீக்கம் முதலிய நோய்களை குணப்படுத்தும். பற்களை வெண்மை நிறமாக மாற்றவும் இந்த கீரை உதவும். மேலும் தாது பலத்தை அதிகரிக்கும்.

(1 vote)