நான்கு வயதில் குழந்தைகள் கண்ணிற்கு கண்ணாடி போடுவதை தடுக்கும் சிறந்த காய் காரட். பால், வெண்ணெயில் நிறைய வைட்டயின் “ஏ இருக்கு. அதற்கு வசதியில்லாதவர்கள் நிறைய காரட்டை சேர்த்துக் கொண்டால் கிட்டத்தட்ட அதே அளவு ‘ஏ’ வைட்டயினை மலிவாகப் பெறலாம். அதனால் கேரட்டை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள கடைசி வரை கண்ணாடி போடாமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது. குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது.
காரட்டின் பிறப்பிடம் ஆப்கனிஸ்தானும் அதனை அடுத்த பகுதிகளுமே. மேல் நாட்டவர் படையெடுப்பால் அது நமக்கு வந்து சேர்ந்தது. பச்சை உணவாகக் காரட்டை உண்பதே சிறந்தது! காரட் ஜூஸ் செய்து உண்ணலாம். பறித்து மிகக் காலந்தாழ்த்தி சமைத்தாலோ அதிக நேரம் கொதிக்க வைத்தாலோ அல்லது திறந்த பாத்திரத்தில் சமைத்தாலோ காரட்டின் உயிர்சத்து அழிந்துவிடும். கார்ட் செடியின் இலைகள் கீரைகளும் பயனுடையது.
காரட் நன்மைகள் பயன்கள்
புளியேப்பம், பசி மந்தம்
வயிற்றில் அமிலம் காரணமாகப் புளியேப்பம், பசி மந்தம் ஏற்படுபவர்கள் காரட்டைத் துருவி பச்சிடி செய்து சாப்பிட நீங்கும்.
தொற்று நோய்க்கு
காரட்டில் ‘காரடீன்’ என்ற சிறப்புப் பொருள் உள்ளது. இதுவே வைட்டமின் உண்டாவதற்குக் காரணமாக இருப்பதுடன் தொத்து நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கும்.
உடல் இளைக்க
உடல் இளைக்க பட்டினி கிடப்பது சிறந்ததல்ல. காரட்டே போதும். காரட் பச்சடியை அடிக்கடி சாப்பிட்ட உடல் இளைக்கும் மேலும் கொழுப்பைக் குறைக்கும் சக்தி காரட்டின் தனித்தன்மை என்று கூட சொல்லலாம்.
கிருமிகளை அழிக்கும்
கிருமிகளை அழிக்கும் சக்தி காரட்டுக்கு அதிகமுண்டு.
இரத்த சோகைக்கு
இரத்தக் குறைவு காரணமாக உடலில் சோகை ஏற்பட்டால் காரட் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.
சிறுநீர் கோளறு
சிறுநீர் சம்மந்தமான கோளாறுகளைச் சரிப்படுத்தும் ஆற்றலும் காரட்டுக்கு உண்டு.
சருமத்திற்கு
தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் சிறந்த பலனை அளிக்கும். காரட் உண்பதால் சருமம் பளபளக்கும்.