cabbage benefits in tamil, muttaikose benefits in tamil

முட்டை கோஸ் – நம் காய்கறி அறிவோம்

கோஸ் என்று அனைவராலும் அழைக்கப்படும் முட்டை கோஸ் பல மருத்துவகுணங்கள் கொண்ட காய் வகையாகும். என்னதான் தமிழகத்தின் காய் வகையைச் சேர்த்ததாக இந்த முட்டை கோஸ் இல்லையென்றாலும் இன்று தமிழக உணவுகளில் பிரதான இடத்தை பிடித்திருக்க கூடியதாக உள்ளது. கோஸ் பொரியல், கோஸ் கூட்டு, குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் ரோல் என பலவிதமான உணவுகள் இன்று நம் தமிழகம் உணவுகளாக பரிமாறப்படுகிறது.

கோஸ் நன்மைகள்

ஐரோப்பாக் கண்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்திற்கு பெரிய அளவில் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகளில் ஒன்று இந்த கோஸ். பலவிதமான மருத்துவ குணங்களையும் சத்துகளையும் கொண்டது. குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் வருவதை தடுக்க கூடிய ஆற்றல் நிறைந்தது, உடலில் ஏற்படும் புண்களுக்கு நல்ல ஒரு மருந்தாக உள்ளது, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கக்கூடியது, உடலில் ஏற்படும் நோய் தொற்றுகள் பாக்டீரியா வைரஸ் போன்ற தோற்றுகளையும் அழிக்கக் கூடிய ஆற்றல் நிறைந்த காய் இந்த கோஸ்.

cabbage benefits in tamil, muttaikose benefits in tamil

எவ்வளவு கோஸ் உண்ணலாம்?

அதிகமாக கோஸ் உணவை உட்கொள்ளாமல் வாரம் ஒரு முறை ஓரளவு என தொடர்ந்து உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நோய்களில் இருந்து நம்மை காக்கும். அதிகமாகும் பொழுது அது பலவிதமான உபாதைகளையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. பல நாடுகளில் கண் சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, காசநோய், புற்றுநோய், வைட்டமின் சி குறைபாடினால் வரக்கூடிய நோய்கள், திசுக்களில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு சிறந்த ஒரு மருந்தாக உள்ளது. உடல் எடையை குறைக்க பெருமளவில் உதவும் காய் முட்டை கோஸ். சாறாக சமைக்காமல் எடுக்க வயது முதிர்வையும் கோஸ் தடுக்கும்.

எந்த காலத்தில் கோஸ் உண்ணலாம்?

கோடை மற்றும் வசந்த காலத்தில் கோஸ் காயை அதிகமாக பயன்படுத்தலாம், அதுவே குளிர்காலத்தில் குறைவாக பயன்படுத்த வேண்டும். கோஸ் காயில் பல சத்துக்கள் உள்ளது குறிப்பாக நார் சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது, அதனுடன் சத்துக்கள் மிக அதிகம் கொண்ட பல தாது சத்துக்களும் உள்ளது. இதன் இலையில் வைட்டமின் ஏ சத்துக்களும் உள்ளது. தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது சிறந்தது.

ரத்தத்தை சுத்தமாக்கும் ஆற்றலும் இந்த முட்டைகோஸை காய்க்கு அதிகமாகவே உள்ளது. மனிதர்கள் வாரம் ஒருமுறை முட்டைகோஸ் உணவை உட்கொள்ள 60% பெருங்குடல் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கிறது. இரைப்பை புண் உள்ளவர்கள் அவ்வப்பொழுது அல்லது இருக்கும் காலத்தில் அன்றாடம் என முட்டை கோஸ் சாறு அருந்திவர புண் விரைவில் ஆறுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

நமது தமிழகத்தில் சூப் செய்ய அதிகமாக கோஸின் கடினமான தலைப் பகுதி மற்றும் காம்புகள் போன்ற கடினமான பகுதிகளை நாம் பயன்படுத்துவதுண்டு. இவற்றில் பல சத்துக்கள் உள்ளது அதனால் அவற்றை வீணாக்காமல் பயன்படுத்த குடல் புண் விரைவில் மறையும். கோஸ் சாறு தயாரிக்க அவற்றுடன் வேறு ஏதேனும் காய், மிளகு, புதினா, சீரகம் சேர்த்து தயாரிக்கலாம். அதனுடன் தக்காளி சாறு, எலுமிச்சை, அன்னாசி பழ சாறு என விதவிதமான சுவையிலும் தயாரித்துப் பருகலாம்.

சமைக்காமல் அதாவது அடுப்பில் ஏற்றாமல் உண்ணப்படும் கோஸ் உடலுக்கு பல நோய்க்கு மிக சிறந்த மருந்தாக உள்ளது. சமைப்பதால் அவற்றின் சத்துக்கள் குறைவதும், சமைக்கும் பொழுது சேர்க்கப்படும் கூட்டுப் பொருளினால் சத்துக்கள் மாறுவதும் ஏற்படும். மேலும் இன்று பொதுவாக சந்தையில் வரும் கோஸ் அதிக இரசாயனங்கள், கடுமையான பூச்சி கொல்லிகளைக் கொண்டு பயிர்செய்யப்படுகிறது. இவற்றை தவிர்ப்பது சிறந்தது.

(1 vote)