கத்தரிக்காய் – நம் காய்கறி அறிவோம்

வழுதுணங்காய் என்று சங்க இலக்கியத்தில் வரும் கத்தரிக்காய் நம் தமிழர்களின் மிக முக்கியமான காய். தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கத்தரிக்காய் வகைகள் இருந்துள்ளது. நெய் கத்தரி, முள்ளுக் கத்தரி, பவானி கத்திரி, மணப்பறை கத்தரி, குண்டு கத்தரி, பச்சை கத்தரி, வெள்ளை கத்தரி, நீள கத்தரி, ஊதா கத்தரி, வெளிர் பச்சை கத்தரி, பூனைத்தலை கத்தரி, தூக்கானம்பாளையம் கத்தரி, சுக்காம்பார் கத்தரி என பல வகை கத்தரி வகைகள் உள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திலும், மாவட்டத்திலும் விளையும் கத்தரி அந்தந்த மண்ணிற்கும், தண்ணீருக்கும் ஏற்றார்ப்போல் சுவையையும் மருத்துவக்குணங்களையும் பெற்றிருக்கும். சத்துக்கள் மட்டுமில்லாமல் பல மருத்துவகுணங்களையும் கத்தரிக்காய் கொண்டுள்ளது.

கத்தரிக்காய் சத்துக்கள்

நார்சத்து, புரதம், வைட்டமின் கே, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, சி சத்துக்கள் மற்றும் தாது சத்துக்கள் குறிப்பாக சுண்ணாம்பு சத்துக்கள், மக்னிசியம் சத்துக்கள் கத்தரிகாயில் நிரம்பியுள்ளது.

கத்தரிக்காய் பயன்கள்

  • புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்ட அற்புதமான காய். பல ஆய்வுகள் இதனை வெளிபடுத்தியுள்ளது.
  • எலும்புகளுக்கு பலமளிக்கும்.
  • உடல் பருமனை குறைக்க உதவும்.
  • நரம்புகளை வலுப்படுத்தும், நரம்பு சார்ந்த நோய்களுக்கு மிக சிறந்த உணவு.
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
  • இரத்த சோகைக்கும் நல்லது.
  • மூளை, மனதிற்கு புத்துணர்வளிக்கும்.
  • கொழுப்பை கரைக்கும் மிக சிறந்த உணவு.
  • உடலில் ஏற்படும் நச்சுக்களை நீக்க உதவும்.

  • சருமத்தை பாதுகாக்கும்
  • புகைப் பிடிப்பவர்களுக்கு அதிலிருந்து விடுவிக்க உதவும்.
  • கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
  • பக்கவாதத்தை தடுக்கும் மருந்துகளில் மிக முக்கியமானது.
  • இருதயத்தை காக்கும்.
  • இரத்த நாளங்களில் தேங்கும் படிமங்களை, கொழுப்பை கரைக்கும் ஆற்றல் அதிகம் கொண்ட காய் கத்தரிக்காய்.
  • வலிப்பு நோய் உள்ளவர்கள் கத்தரியின் சாறை பருகவர அந்த நல்ல பலன் கிடைக்கும்.
(1 vote)