பலருக்கு இருக்கக்கூடிய ஒரு தொந்தரவு ரத்தக்கொதிப்பு. அதிக சோடியம் உள்ள உணவுகள் இரசாயனங்கள் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வதாலும், ஊட்டச்சத்து அற்ற உணவுகளை உட்கொள்வது, மன உளைச்சல், தூக்கமின்மையும் ரத்தக் கொதிப்பு ஏற்பட காரணமாக உள்ளது. சோடியம் உள்ள உணவுகள் இரத்தக் கொதிப்பிற்கு முக்கிய காரணம் என்றதும் பலருக்கும் வரக்கூடிய ஒரு எண்ணம் நான் இனிப்பு சாப்பிட மாட்டேன்.. உப்பு அதிகமா சேர்த்துக்கொள்ள மாட்டேன்.. என்று தோன்றலாம். ஆனால் நாம் உண்ணக்கூடிய பக்கெட் உணவு, அடைக்கப்பட்ட ஒவ்வொரு உணவிலும் அதிகப்படியான ரசாயனங்கள், உப்புக்கள், சுவையூட்டிகள் நிறையவே உள்ளது.
இவைகளே நமது இரத்த கொதிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்வோம். அதில் அந்த உணவு விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பல ரசாயனங்களும், நச்சுப் பொருட்களும் அதில் கலக்கப்படுகிறது. மேலும் அந்த உணவின் நீண்ட நாள் நல்ல சுவையையும் மணத்தையும் அளிக்கவும் சில ரசாயனங்களும் இதனில் கலக்கப்படுகிறது. இவை அனைத்துமே உப்பு உணவுகள். இவையே ரத்தக் கொதிப்பு ஏற்பட முக்கிய காரணமாகும்.
ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவர சில எளிய வழிகள்
- எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்வது சிறந்தது.
- செரிமான தொந்தரவு உள்ளவர்கள் அதிக அஜீரணத்தை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தவறினால் ரத்தகொதிப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல் இதயம் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.
- மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தேவைகேற்ப நீர் அருந்துவது, அதிக நார்ச்சத்துள்ள உணவுகளையும் அதிக பிற சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் உட்கொள்வது அவசியம். மாவு சத்துக்கள் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வது உகந்ததல்ல.
- பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
- உப்பு, புளியை குறைத்துக்கொண்டு அதற்கு பதிலாக பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகளையும் எலுமிச்சையை பயன்படுத்துவது சிறந்தது.
- அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது நல்ல ஒரு ஆரோக்கியத்தை அளிக்கும்.
- எண்ணெய் குளியல் அவசியமானதாகும். அவ்வப்பொழுது எண்ணைக்குளியல் செய்வதால் ரத்தக்கொதிப்பு மெல்ல மறையத் தொடங்கும்.
- உடற்பயிற்சி, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது.