பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் காரத்திற்கு பயன்படுத்திய ஒரு பொருள் மிளகு. சம்பத்தில் சில நூற்றாண்டுகளிலேயே வெளிநாடுகளில் இருந்து வந்த மிளகாய் பிரபலமானது, மிளகு மிளகாயை விட பல மடங்கு சத்துக்களையும், சக்தியையும் அளிக்கும் தன்மை கொண்டது. மேலும் மிளகு – மலத்தை இளக்கும், அதனால் மலம்+இளகும்=மிளகு என ஆனது.
மிளகு உடல் உஷ்ணத்தை சமன்படுத்தும். அதுவே மிளகாய் மலத்தை காயவைக்கும், மலத்தை கெட்டப்படுத்தும், உடல் உஷ்ணததை அதிகரிக்கும். மிளகு சிறந்த ஒரு காயகற்பமகவும் செயல்படுகிறது.
வேறு பெயர்கள்
குறுமிளகு, கலினை, கறிகாயம், கோளகம், மலையாளி, திரங்கள், சருமபந்தம், வல்லிசம் என பல பெயர்கள் கொண்டுள்ளது.
கொடி வகையை சேர்ந்தது மிளகு. தனி இலைகளாகவும், இலைகள் பெரிய அகன்ற நள்வடிவமாகவும் அமையப்பெற்றது. எட்டு கோணங்களில் காய்க்கும் தன்மைக் கொண்டது. கார்ப்பு சுவைக் கொண்டது மிளகு. கொடியின் விதையம் கொடியும் பயன்படும் பகுதிகளாகும்.
மிளகின் பயன்கள்
உடவில் ஏற்படும் வீக்கங்களையும், நச்சு கழிவுகளையும் நீக்கும் தன்மைக் கொண்டது. வாதமடக்கியாகவும் செயல்படுகிறது. வாத நோய்களை நீக்கும் தன்மைக் கொண்டது. மேலும் குளிர் சுரம், கோழை, சுவையின்மை, மூல நோய், இருமல், காதுவலி, அஜீரணம், காமாலை போன்றவற்றை தீர்க்கும்.
கபம், அஜீரணம் நீங்க
மிளகைப் பொடி செய்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு சிட்டிகை அளவு தேன் கலந்து உண்பதால் வாயு, அஜீரணம், ஏப்பம், இருமல், கபம் ஆகியவை நீங்கும்.
தலைவலி, தலை பாரம்
மிளகுத் தூள், வெள்ளத் தூள் ஆகியவற்ற ஒரு சிட்டிகை அளவு என எடுத்து அன்றாடம் காலை, மாலை இரண்டு உட்கொள்ள தலைவலி, அஜீரணம், தலைபாரம் நீங்கும்.
மூல நோய்
மிளகுத்தூள், கசகசா, ஓமம் ஆகியவற்றுடன் தேன் கலந்து ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை உண்டு வர மூல நோய் தொந்தரவுகள் நீங்கும்.