கருப்பு உளுந்து பொடி எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும் உணவு. இந்த பொடியினை அன்றாடம் சுடு சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து உணவிற்கு முன் உண்டுவர விரைவாக மூட்டு வலி, இடுப்பு வலி மறையும். For English Blackgram Powder Recipe.
தேவையான பொருட்கள்
- 1 கப் முழு கருப்பு உளுந்து
- 10 மிளகு
- 4-5 காய்ந்த மிளகாய்
- சிறிது பெருங்காயத்தூள்
- தேவையான அளவு கல் உப்பு
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை
- ஒரு மண்சட்டியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கருப்பு உளுந்தை சற்று வறுக்கவேண்டும்
- அதனுடன் மிளகு, மிளகாய் சேர்த்துவறுத்துக் கொள்ளவேண்டும்
- பின் அடுப்பை அணைத்தவுடன் அதில் உப்பு, பெருங்காயம் சேர்க்கவேண்டும். தேவைபட்டால் சிறிது கருவேப்பிலை சேர்க்கலாம். மணமும் சுவையும் பிரமாதமாக இருக்கும்.
- இவை அனைத்தும் நன்கு அறிய பின் மிக்ஸ்யில் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான கருப்பு உளுந்து பொடி தயார்.
கருப்பு உளுந்து பொடி
கருப்பு உளுந்து எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும் உணவு. இந்த பொடியினை அன்றாடம் சுடு சதத்துடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து உணவிற்கு முன் உண்டுவர விரைவாக மூட்டு வலி, இடுப்பு வலி மறையும்.
⏲️ ஆயத்த நேரம்
5 mins
⏲️ சமைக்கும் நேரம்
10 mins
🍴 பரிமாறும் அளவு
4
🍲 உணவு
பொடி
தேவையான பொருட்கள்
- 1 கப் முழு கருப்பு உளுந்து
- 10 மிளகு
- 4-5 காய்ந்த மிளகாய்
- சிறிது பெருங்காயத்தூள்
- தேவையான அளவு கல் உப்பு
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை
- ஒரு மண்சட்டியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கருப்பு உளுந்தை சற்று சிவக்க வறுக்கவேண்டும்
- அதனுடன் மிளகு, மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவேண்டும்
- பின் அடுப்பை அணைத்தவுடன் அதில் உப்பு, பெருங்காயம் சேர்க்கவேண்டும். தேவைபட்டால் சிறிது கருவேப்பிலை சேர்க்கலாம். மனமும் சுவையும் பிரமாதமாக இருக்கும்.
- இவை அனைத்தும் நன்கு அறிய பின் மிக்ஸ்யில் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான கருப்பு உளுந்து பொடி தயார்.