பாகற்காய் பொடி

நீரிழிவுக்கு நோய்க்கு கண் கண்ட மருந்து பாகற்காய். இதில் பொடி செய்ய முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா… கசப்பு சுவை கொண்ட இந்த பாகற்காயை பலரும் விரும்புவதில்லை ஆனால் இவ்வாறு பாகற்காயை கொண்டு சுவையான பொடி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். நீரிழிவுக்கு மட்டுமல்ல உடல் புழு, பூச்சிகளுக்கும் சிறந்த உணவு இது. குழந்தைகளுக்கு இந்த பொடியை சேர்த்து நெய் விட்டு சாதம் அல்லது இட்லி தோசைக்கு அளிக்க விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

  • ½ கிலோ பாகற்காய்
  • 10 மிளகாய் வற்றல்
  • 50 கிராம் மல்லி
  • சிறிது விரலி மஞ்சள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • எண்ணெய்

செய்முறை

  • பாகற்காயை கழுவி விதைகளை நீக்கிக் கொண்டு நைசாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • சிறிது தண்ணீர் விட்டு உப்புடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இதனை வெயிலில் உலர்த்த வேண்டும்.
  • இரண்டு மூன்று நாட்களில் நன்கு காய்ந்து பாகற்காய் வத்தல் தயாராக இருக்கும்.
  • பிறகு மிளகாய் வற்றல், மல்லி, விரலி மஞ்சள் ஆகியவற்றை வறுத்து எடுக்க வேண்டும்.

  • பின் உலர்ந்த பாகற்காய்களை எண்ணெயில் முறுகுமாறு, கருகிவிடாமல் சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இவற்றை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • சாதத்துடன் சாப்பிடலாம். பொரியல் போலவும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். பொரியலாக சாப்பிட விரும்புபவர்கள் நைசாக அரைக்காமல் சற்று ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளலாம்.