பாகற்காய் மருத்துவம்

தொற்று நோய் பரவாத வகையில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழ விரும்பும் அனைவருக்கும் தேவையான சத்துக்கள் பாகற்காயில் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் வைட்டமின் ஏ, பி1, பி2, வைட்டமின் சி, இரும்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட காய்களில் ஒன்றான இந்த பாகற்காய் அதிக சத்துக்களையும் உடலில் ஏற்படும் பல நோய்களையும் நீக்கவல்லது. அமெரிக்காவிலிருந்து விதைகள் மற்ற நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு பயிரிடப்பட்டன. தற்போது இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளிலும் பாகற்காய் நன்கு பயிராகிறது.

மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் நிரம்பிய காய்கறி இது. குடி மயக்கத்தை நீக்கவல்லது. காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்த வல்லது. பசி சுவையை உண்டு பண்ணும் உணவு இது. பித்தத்தை குறைக்கும். மலச்சிக்கலை போக்கும்.

இவ்வளவு சிறப்புகளை உடைய பாகற்காயை மனிதர்கள் அதன் கசப்பு சுவை காரணமாக விரும்புவதில்லை. ஆனால் இதன் பெருமை இந்த நூற்றாண்டில் தான் நன்கு உணர்ந்ததால் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உணவுடன் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

பாகற்காயில் இன்சுலின் போன்ற ஒரு பொருள் இருக்கிறது. அது நீரிழிவுக்காரர்களின் ரத்தத்திலும், சிறுநீரிலும் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

நம் நாட்டில் இயற்கை மருத்துவ சிகிச்சையில் பல்லாண்டுகளாக பாகற்காய் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலையில் 5 – 6 பாகற்காயகளை எடுத்து அதனை சாறு போல தயாரித்த நீரிழிவு நோயாளிகள் அருந்தினால் அடிக்கடி பசி எடுக்காது.

உயர் ரத்த அழுத்தம், நரம்பு கோளாறுகள், சத்துக்குறைபாடு, கண் தொடர்பான நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. இந்த நோய்களை வர விடாமல் நம்மை பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்தி வர தொற்று நோய்கள் ஏதும் அண்டாது, மூலத் தொந்தரவு குணமாகிறது, குடல் பூச்சிகள் அழிந்து விடுகிறது, ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

பாகற்காயின் பயன்கள்

  • பாகற்காயில் உள்ள இரும்புச்சத்துக்கள் ரத்த விருத்தியை ஏற்படுகிறது.
  • சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் பாகற்காய் சாப்பிட்டால் நீங்கிவிடும்.
  • மூலத் தொந்தரவு உள்ளவர்கள் பாகற்காயின் இலைகளை பறித்து 3 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து அதை மோருடன் கலந்து காலையில் அருந்த விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு மாத காலம் இந்த சிகிச்சையை தொடர்ந்தால் மூல நோய் எளிதில் கட்டுப்படும்.
  • சொறி, சிரங்கு, படர்தாமரை தோல் நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்து பாகற்காய். இதனை சாறாக தயாரித்து இந்த சாறுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட ரத்தம் தொடர்பாக வரும் அனைத்து தோல் நோய்களும் கட்டுப்படும்.