தயிர் மூலிகை கரைசல்

இயற்கை வளர்ச்சி ஊக்கி / Bio Fertilizer / Organic Growth Promoter

பயிர்களின் வளர்ச்சிக்கு சிறந்த கரைசல் இந்த தயிர் மூலிகை கரைசல். பல பல நுண்ணுயிர்கள் இயற்கையாகவே நிறைந்த ஒரு பொருள் தயிர். இதில் மூலிகைகளையும் கலந்து கரைசல் தயாரித்து செடிகளுக்குப் பயன்படுத்த மண்ணிலிருக்கும் நுண்ணுயிர்கள் பல மடங்கு அதிகரிப்பதோடு நோய் தாக்குதலில் இருந்தும் செடிகளை பயிர்களை பாதுகாக்கலாம்.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொள்ளிகளால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.

இயற்கை விவசாயத்தில் சிறந்த வளர்ச்சி ஊக்கியாக இருப்பது இந்த தயிர் மூலிகை கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாப்பதோடு மண்வளத்தை அதிகரித்து நல்ல மகசூலையும் பெறலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

தயிர் மூலிகை கரைசல் தேவையான பொருட்கள்

வேப்பங்கொட்டை தூள் – 1 கிலோ
தயிர் – 2 லிட்டர்
அதிமதுரம் தூள் – 1௦ கிராம்
கடுக்காய் பொடி – 1௦ கிராம்
பெருங்கயத்தூள் – 1௦ கிராம்
தண்ணீர் – 5 லிட்டர்
பசுவின் கோ மூத்திரம் – 3 லிட்டர்

தயிர் மூலிகை கரைசல் தயாரிக்கும் முறை

முதலில் ஒரு மண்பானையில் வேப்பங்கொட்டை தூள் 1 கிலோவை 5 லிட்டர் தண்ணீரில் குறைந்தது 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் இதனை வடிகட்டி சாறு எடுக்க வேண்டும். பிறகு எடுத்து வைத்த சாறுடன் 3 லிட்டர் பசுவின் கோமூத்திரம், 2 லிட்டர் பசுந்தயிர் சேர்க்க வேண்டும்.

இதனுடன் அதிமதுரம், பெருங்கயத்தூள், கடுக்காய் தூளையும் சேர்க்க வேண்டும். இதனை 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அவ்வளவுதான் 24 மணி நேரத்தில் இந்த தயிர் மூலிகை கரைசல் தயார். இதனை வடிகட்டி பயன்படுத்தலாம்.

தயிர் மூலிகை கரைசல் பயன்படுத்தும் முறை

தயிர் மூலிகை கரைசலை 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

ஒரு லிட்டர் கரைசலுடன் 1௦ லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து மரங்கள், காய்கறி செடிகள், பழங்களுக்கு காலை, மாலை தெளிக்க நல்ல மகசூலை பெறலாம். பூ உதிர்வு கட்டுப்படும். அதிக பூக்களையும் காய்களையும் பெறலாம்.

தயிர் மூலிகை கரைசல் பயன்கள்

சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
மண்ணின் நுண்ணுயிர்கள் அதிகரிக்கும்,
மண்ணின் வளம் அதிகரிக்கும்.
பழங்கள், காய்கள், கீரைகள் அதிக சுவையானதாக இருக்கும்.
பழங்களில் ஏற்படும் நோய் தாக்குதல் கட்டுப்படும்.
பழங்களில் காணப்படும் ஈக்களை இது கட்டுப்படுத்தும்.

தயிர் மூலிகை கரைசல்

பயிர்களின் வளர்ச்சிக்கு சிறந்த கரைசல் இந்த தயிர் மூலிகை கரைசல். பல பல நுண்ணுயிர்கள் இயற்கையாகவே நிறைந்த ஒரு பொருள் தயிர். இதில் மூலிகைகளையும் கலந்து கரைசல் தயாரித்து செடிகளுக்குப் பயன்படுத்த மண்ணிலிருக்கும் நுண்ணுயிர்கள் பல மடங்கு அதிகரிப்பதோடு நோய் தாக்குதலில் இருந்தும் செடிகளை பயிர்களை பாதுகாக்கலாம்.
இரசாயன உரங்கள், பூச்சிக்கொள்ளிகளால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.
இயற்கை விவசாயத்தில் சிறந்த வளர்ச்சி ஊக்கியாக இருப்பது இந்த தயிர் மூலிகை கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாப்பதோடு மண்வளத்தை அதிகரித்து நல்ல மகசூலையும் பெறலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ வேப்பங்கொட்டை தூள்
  • 2 லிட்டர் தயிர்
  • 1௦ கிராம் அதிமதுரம் தூள்
  • 1௦ கிராம் கடுக்காய் பொடி
  • 1௦ கிராம் பெருங்கயத்தூள்
  • 5 லிட்டர் தண்ணீர்
  • 3 லிட்டர் பசுவின் கோ மூத்திரம்

செய்முறை

  • முதலில் ஒரு மண்பானையில் வேப்பங்கொட்டை தூள் 1 கிலோவை 5 லிட்டர் தண்ணீரில் குறைந்தது 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • பின் இதனை வடிகட்டி சாறு எடுக்க வேண்டும்.
  • பிறகு எடுத்து வைத்த சாறுடன் 3 லிட்டர் பசுவின் கோமூத்திரம், 2 லிட்டர் பசுந்தயிர் சேர்க்க வேண்டும்.
  • இதனுடன் அதிமதுரம், பெருங்கயத்தூள், கடுக்காய் தூளையும் சேர்க்க வேண்டும்.
  • இதனை 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் 24 மணி நேரத்தில் இந்த தயிர் மூலிகை கரைசல் தயார். இதனை வடிகட்டி பயன்படுத்தலாம்.

குறிப்புகள்

(3 votes)