பவித்ரமான வில்வ இலையைப் போல் உடலை மூன்று இதழ்களாகப் பிரிக்கும் ஆசனம் பத்ராசனம். பத்திரம் என்றால் பூஜை பயன்படும் வில்வம் என்பதாகும். மேலும் இந்த ஆசனம் உடல், மூச்சு, எண்ணம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் ஒருநிலைப்படுத்தும் ஆற்றலையும் அளிக்கிறது.
உடலின் கீழ் பகுதி வலுபெறவும் இரத்த ஓட்டம் சீராகவும் இருக்க பயன்படும் ஆசனம். தியானம் செய்பவர்களுக்கு மிக சிறந்த ஆசனமுமாகவும் இது கருதப்படுகிறது. குண்டலினிக்கு சக்தியை அளிக்கும் ஆசனம் என்பதால் தியானத்திற்கு சிறந்தது.
பத்ராசனம் செய்முறை
தரை விரிப்பில் உட்கார்ந்து பாதங்களின் இரு உள்ளங்கால்களையும் ஒன்றாக இணைத்து வைக்க வேண்டும். இந்த நேரத்தில் முழங்கால் தரையில் இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் இவ்வாறு செய்வதும் அதன் பின் இந்த கால்களின் மேல் நாமது உடலை வைத்து உட்கார வேண்டும். முதுகு நேராகவும், கைகள் இரண்டும் முழங்கால்களை தொட்டவாறு சின் முத்திரையில் இருக்க வேண்டும்.
மூட்டுவலிக்கு
மூட்டுகளின் அசைவை சீராக்கும், மூட்டுவலிக்கு சிறந்த ஆசனம்.
ஆண்கள் பெண்களுக்கு ஏற்படும் நோய்கள்
ஜனன உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த ஆசனம் இந்த பத்ராசனம். உடலின் கீழ் பகுதியில் இருக்கும் பகுதிக்கும், உள்ளுருப்புகளுக்கும் ஆற்றலையும், இரத்த ஓட்டத்தையும் அளித்து அந்த பகுதி நோய்களையும் போக்கும்,
சுகப்பிரசவம் ஏற்பட
கருவுற்ற பெண்கள் ஐந்து – ஆறு மாதத்திலிருந்து இந்த ஆசனத்தை தொடர்ந்து அன்றாடம் செய்ய சுகப்பிரசவம் ஏற்படும். இடுப்பு எலும்பிகள், ஜனன உறுப்பை பலப்படுத்தும்.
மாதவிடாய் கோளாறுகளை போக்கும்
கருப்பை கோளாறுகள், மாதவிடாய் சிக்கல் போன்றவற்றிற்கு மிக சிறந்த ஆசனம்.
உயிரணு எண்ணிக்கையைக் கூட்டும்
ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று உயிரணு எண்ணிக்கை குறைபாடு. அதற்கு சிறந்த ஆசனம்.
ஊளை சதையைக் கரைக்கும்
தொடையில் இருக்கும் அதிகப்படியான சதையைக் குறைக்க சிறந்த எளிய ஆசனம் இது.