சத்துக்களை அதிகம் கொண்ட இலைகளில் ஒன்று வெற்றிலை. இறைவனுக்கு படைக்கப்படும் அனைத்துப் பொருட்களும் ஏதேனும் ஒரு விதத்தில் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வகையிலேயே இருக்கும். எவையெல்லாம் நாம் மறக்காமல் (மறைக்காமல்) ஒவ்வொரு காலத்திலும் உட்கொள்ள வேண்டுமோ அவற்றை நம் முன்னோர்கள் இறைவழிபாட்டுடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளனர். தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை, துளசி, வில்வம் என்ற வகையில் வெற்றிலைக்கும் பெரும் பங்குள்ளது.
வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து எடுப்பவர்களுக்கும் எலும்பு சம்மந்தமான தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. அதுமட்டுமல்லாமல் வெற்றிலையை சூப்பாக செய்து அவ்வப்பொழுது உண்பதால் அஜீரணம் மறையும், ஜீரண சக்தி அதிகரிக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், வலி தீரும், நெஞ்சு சளி அகலும், காதில் ஏற்படும் வலி நீங்கும், எலும்புகள் பலப்படும், தாய்மார்களின் தாய்ப் பால் சுரப்பு அதிகரிக்கும். இந்த சூப் பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் ஏற்றது. அதிக சளியை விரைவில் வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்
- 4 – 5 வெற்றிலை
- 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்
- 1/4 ஸ்பூன் சீரகத் தூள்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- கல் உப்பு
- கொத்தமல்லி
- கருவேப்பிலை
செய்முறை
- முதலில் வெற்றிலையை நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறு எடுக்கவேண்டும்.
- அதனுடன் சூடான நீர் கலந்து மிளகுத் தூள், சீரகத் தூள், பெருங்காயம், கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கலந்து பருக வேண்டும்
- தேவைப்பட்டால் அடுப்பில் வைத்து ஓரிரு நிமிடத்தில் மிதமான சூட்டில் இறக்கிவிடவேண்டும்.
- அதிகம் சூடு படுத்தக் கூடாது.
- தேவைக்கேற்ப சாதாரண நீரை நான்கு சுடவைத்து இவற்றுடன் கலந்துக் கொள்வது சிறந்தது.
வெற்றிலை சூப்