வெறும் இலை – வெற்றிலை, ஆனால் இதற்கு இருக்கும் மரியாதையும் மகத்துவமும் மிக அதிகம். வெற்றிலை இல்லாத மங்கள நிகழ்வுகளும் இல்லை, வெற்றிலை இல்லாத கை மருத்துவமும் இல்லை. அவ்வளவு பலன்களைக் கொண்டது வெற்றிலை மருத்துவம்.
உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் செரிமானமின்மை. உண்ட உணவு சீராக செரிமானம் ஆகா இரத்த உற்பத்தி சீராகும், பசி எடுக்கும், ஆரோக்கியம் பெருகும். மேலும் நமது நாட்டு வைத்திய முறையிலும், பாட்டி வைத்திய முறையிலும் வெற்றிலை மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வெற்றிலை போடாத நம் முன்னோர்களை பார்த்திருக்க முடியாது.
வெற்றிலை, சைவ உணவை உண்பவர்களுக்கு கிடைக்காத சில சத்துக்கள் இந்த வெற்றிலையில் உள்ளது மற்றொரு சிறப்பு.
எலும்புகளுக்கு
வெற்றிலை எலும்புகளுக்கு பலமளிக்கும் மிகசிறந்த மருந்து. இதனுடன் அளவான பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போட எலும்புகள் உறுதியாகும், இரத்தம் விருத்தியாகும்.
வயிற்றுவலிக்கு
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலிக்கு வெற்றிலையை விளக்கெண்ணையில் வாட்டி வயிற்றில் வைத்து கட்ட எப்பேர்பட்ட வயிற்றுவலியும் நீங்கும்.
தலைவலிக்கு
தலைவலிக்கு இரண்டு அல்லது மூன்று துளிகள் வெற்றிலைச் சாற்றை மூக்கினுள் விட்டால் தலைவலி தீரும்.
காது குத்தல்
காது குத்தலுக்கு வெற்றிலைச் சாற்றை மூன்று துளிகள் காதினுள் விட காது குத்தல் குணமாகும்.
பால் கட்டிக்கு
தாய்மார்களுக்கு பால் சுரக்கும் போது பால் கட்டி உண்டாகும். வீக்கத்துக்கு வெற்றிலையை நெருப்பில் வாட்டி அப்படியே அடுக்கடுக்காக முலையில் வைத்துக் கட்ட வீக்கம் நீங்கும்.
நுரையீரலுக்கு
நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்
சாற்றுடன் இஞ்சிச் சாறு கலந்து கொடுக்க நல்ல பலனை பெறலாம்.
தீ புண்
தீப்பட்ட புண்கள் மீது வெற்றிலையை வைத்து வந்தால் புண் ஆறும்.
குரலுக்கு
வெற்றிலை வேரைத் தின்று வர பாடகர்களின் தொணி சுத்தப்படும்.
நெஞ்சுவலி
வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின் மேல் போட, நெஞ்சுவலி, கப இருமல், மூச்சுமுட்டல். கடின சுவாசம் விலகும்.
சளி, இருமல்
வெற்றிலையை கற்பூரம் சேர்த்த தேங்காய் எண்ணெயில் நனைத்து வாட்டி இளஞ்சூட்டில் குழந்தைகளின் மார்பின் மேல் போட குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் உடனடியாக நீங்கும்.
இருமல்
வெற்றிலைச் சாற்றில் தேன் சேர்த்து உண்டால் இருமல் விலகும்.
தேள்கடி
தேள்கடி பட்டவர்களுக்கு ஒரு பெரிய வெற்றிலையில் பதினொரு மிளகை வைத்து மடித்துக் கொடுத்து நன்றாக மென்று விழுங்கும்படி செய்தால் தேள் நஞ்சு நீங்கும்.
மேலும் நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய், ஆஸ்துமா, தொற்று நோய், உடலில் ஏற்படும் வலி என பல நோய்களிலிருந்து வெளிவர சிறந்த பலனையும் இந்த வெற்றிலை அளிக்கும்.
Good!