நல்லெண்ணெய் குளியல் எவ்வாறு செய்வது?

நல்லெண்ணெய், சூரியன், எலும்பு இவை மூன்றுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையது. அதனால் அதிகாலை இளம் வெயில் நேரத்தில் உடல் முழுவதும் குளிர நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு (உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து இடங்களிலும்) முடிந்தால் இளம் வெயில் படுமாறு சிறிது நேரம் இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லை என்றால் குளித்த பின் சிறிது நேரம் இளம்வெயிலில் இருப்பது அவசியம்.

உடல் முழுவதும் லேசாக பூண்டு சேர்த்து சூடுபடுத்திய நல்லெண்ணையை உடலில் தேய்த்து குறைந்தது அரைமணிநேரம் நன்கு உடலை மசாஜ் செய்துவிட்டு பின் இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடல் முழுவதும் ஒரு வகையான புத்துணர்வு பெறும். உடல் கழிவுகள் சுடுநீரில் எண்ணெய்யுடன் சேர்ந்து கரைந்து வெளிவர தொடங்கும். மூலிகை குளியல் பொடி கொண்டு உடலுக்கும், சீயக்காய் கொண்டு தலைக்கும் குளிக்க வேண்டும். சோப்பு அல்லது இரசாயனங்கள் கூடவே கூடாது. இரசாயனங்கள் பயன்படுத்தும்  பொழுது கார அமிலத்தன்மைகளில் மாறுபாடு ஏற்பட சருமம் பாதிக்கப்படும். மேலும் தோலில் இருக்கும் துவாரங்கள் அடைக்கப்படும். கழிவுகள் வெளியேறாமல் தடைப்படும்.

எண்ணெய் குளியல் செய்த அன்று செய்யகூடதவை

உடலில் உள்ள உஷ்ணம் வெளியேற தொடங்கும். அதனால்

  • நல்லெண்ணெய் குளியல் செய்த அன்று பகலுறக்கம் கூடாது. கண்களின் மூலம் வெளிவரும் உஷ்ணம் தடைபடாமல் வெளியேற்றப்படவேண்டும்.
  • எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உட்கொள்வது அவசியம்.
  • அதிக குளிர்ச்சி அளிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள கூடாது.
  • உடலுறவு கூடாது.
  • உஷ்ணம், கழிவுகள் வெளியேறுவதால் நல்லெண்ணைக்குளியல் செய்த அன்று உடல் வெப்பமாக இருப்பதை உணர முடியும். அதனால் கடினமான வேலைகளை செய்யக்கூடாது. 

பொதுவாகவே வாராவாரம் நல்லெண்ணெய் குளியல் அவசியம் என்றாலும் கோடையை சமாளிக்கவும், கோடையில் வரும் பலவகையான உடல் உபாதைகளிலிருந்தும் நம்மை காக்க வாரம் ஒரு முறை ஞாயிறு, வியாழக்கிழமை நீங்கலாக  மற்ற நாட்களில் எண்ணெய் அவசியம் எடுக்கவேண்டும். 

மேலும் எண்ணெய் குளியல் செய்வதால் எவ்வாறு புற்றுநோயிலிருந்து வெளிவரலாம் என்று தெரிந்துக்கொள்ள – புற்றுநோய்க்கு மருந்தாகும் எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல் செய்வதால் என்னென்னை நோய்களில் இருந்து வெளிவரலாம் என்று தெரிந்துக்கொள்ள – மருந்தாகும் எண்ணெய் குளியல்