மூலிகை தேநீர், மூலிகை காபி

காலை விடியல் சூரியன் வந்ததா? அல்லது நடு உச்சியில் இருகிறதா? என்று கவனிக்கக் கூட ஒரு ஷனத்தை செலவு செய்யாமல் படுக்கையில் டீ, காபி தேடுபவர்கள் நாமில் பலர். பொழுது விடிவதே டீ அல்லது காபி அருந்தத்தான் என்ற பாவனையும் அருந்தியவுடன் பிராணனே மீண்டு வந்ததுப்போல் கொடுக்கும் கம்பீரமும் காலையை மிக சுவாரசியமாக்குகிறது.

இந்த பாவனையையும் கம்பீரத்தையும் சற்று கவனிக்க, தோன்றுவது என்னவோ இவை நம் கலாச்சாரத்தின் பொக்கிஷம் என்று. அது இல்லை என்று உள்மனம் சொல்வது கேட்கிறது. 

உலகிற்கே விருந்து உபசரிப்பை கற்றுக்கொடுத்த நம் இந்திய தமிழக கலாச்சாரத்தில் விருந்தினரை உபசரிக்கும் முறையில், மிகுந்த கவனமும் அக்கறையும் கலந்திருந்தது. அதுவே நாம் நம் விருந்தினருக்கு வயிற்றைக்கெடுக்காத அமிர்தத்தை என்றும் பரிமாற செய்தது. அவ்வாறு இருக்க இன்றோ விட்டிற்குள் வந்த விருந்தினரை வரவேற்கிறோமோ இல்லையோ ‘காபியா, டீயா’ என்ற கேள்வி மட்டும் முதலில் வருகிறது.

வருபவர்கள் நம்மேல் இருக்கும் மரியாதை, அன்பு, பாசம், அக்கரை என நம் நலவிரும்பிகளாகவும் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை வரவேற்கும் போது அதே அக்கறையையும் அன்பையும் நாமும் தரவேண்டும் என்பது நம் அனைவரும் அறிந்ததே. இன்று நாம் தருகிற வரவேற்பில் இருக்கும் உணவும், உபசரிப்பும், அன்பையும் ஆரோக்கியத்தையும் வெளிபடுத்துகிறதா என்பது தன் நம்முள் இருக்கும் மிகப்பெரிய கேள்வி.

திரவ உணவு என்ற வரிசையில் டீ, காபி அல்லது சந்தையில் கிடைக்கும் குளிர்பானங்கள் மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது. இவை அனைத்தும் கேடு என்று தெரிந்தும் அவற்றை பருகுகிறோம்.

காரணம் அவற்றில் நமக்கு ஏற்பட்டிருக்கும் ஒருவகை மோகமும் அடிமைதனமும் (தொடர்ந்து பருகும் போது இந்தப்பனங்கள் உடலுக்குள் ஒருவகை போதையை தருகின்றன என்பது தனிக்கதை). அதுமட்டுமா புத்துணர்வுக்காக என்று இவற்றை பருகி சோம்பேறியாகவே வளம்வருகிறோம். 

திரவ உணவு என்று சொன்னதும் நாம் அனைவரின் நினைவிற்கும் வருவது காபி டீ தானே. காபியும் டீயும் நம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத இரு முக்கியமான திரவ  உணவுகளாக விளங்குகின்றன. 

பலாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனா காடுகளில் வளர்ந்த தாவரங்களில் இருந்து கிடைத்த ஒருவகை செடிகளின் இலைகள்   மற்றும் ஆப்ரிக்கக் காடுகளில் வளர்ந்த ஒருவகை செடிகளில் இருந்து கிடைத்த கொட்டைகள் மூலமே இந்த டீ, காபி முளைத்தது. இவற்றை உண்ட ஆடுமாடுகள் புத்துணவு பெருவதனை கண்டு மனிதர்களும் இதனை உண்ண தொடங்கினர். 

இப்படி காடுகளில் கிடைத்த ஒருவகை இலை மற்றும் கொட்டை பானத்தை வணிக கண்ணோட்டத்துடன் தயார் செய்து விற்பனை செய்யும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் தான் முதலில் தோன்றியது.

பின் இந்த டீ, காபியை பயிரிடுவதற்காக ஏராளமான காடுகள் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டன. அவற்றில் தான் தேயிலைத் தோட்டங்களும் காபித் தோட்டங்களும் உருவாக்கினர்.

காலையிலும், மாலையிலும் இலவசமாக டீயையும் காபியை கொடுத்து நம் மக்களை எளிதாக டீ காபிக்கு அடிமையாகியது நமக்கு தெரிந்த ரகசியம் தான். 

உடலுக்கு நல்லதா?

இதில் உடல் நலத்திற்கு நன்மைகளே கிடையாதா? என்றால் அப்படியில்லை. உற்சாகம், உடனடியான உடல் தெம்பு என சில தூண்டுதல்கள் இருந்தாலும் இந்த திரவ உணவில் தீமைகளும் அளவுக்கு அதிகமாக உள்ளது. இவற்றில் உள்ள காப்பீன், நரம்பு மண்டலத்தைத் தூண்டி விடுவதால் உடலில் உடனடியாக தற்காலிக புத்துணர்வு தென்படுகிறது.

செயற்கையாக புத்துணர்வை ஏற்படுத்தும் இவற்றை தொடர்ந்து பருகிவர நரம்பு மண்டலம் தன் சீரான செயல்பாட்டை இழக்கிறது. காலப்போக்கில் நரம்பு மண்டலம் தளர்ந்து வலுவிழக்கிறது. அதுமட்டும் இல்லை, குடிகாரர்கள் பருகும் போதைப்பொருளில் இருக்கும் அமிலத்தன்மைக்கு நிகரான அமிலத்தன்மை கொண்ட திரவ உணவு இது.

காபி, டீ, கொக்கோ போன்ற பானங்கள் இரைப்பையை பாதித்து சளிச்சவ்வை சீர்குலைத்து சீரணத்தைத் தடுக்கிறது. பல சமயங்களில் இதயத்தைக் கூட ஒழுங்கு தவறி துடிக்கச் செய்கின்றன. இப்பானங்ளில் உள்ள சர்க்கரை உடலின் சூட்டை அதிகரிக்கும். தொடந்து பருகிவர காரணம் தெரியாத பல நோய்களும் உருவாகின்றன. 

சுவாரசியமான ரகசியம்

மேற்கத்திய மோகத்தில் எல்லாம் செய்யும் நாம் தேநீர் விசயத்தில் உள்ள சுவாரசியமான ரகசியத்தை பார்ப்பதில்லை. இன்று நாம் அருந்தும் டீ மேலை நாட்டவரால் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவர்கள் அதே நிலையிலேயே இன்றும் தேநீர் தயாரித்து பருகுகின்றனர்.

நம்மவர்களோ அதனுடைய தரத்தில் பெரும் மற்றம் செய்து,  கலப்படத்துடன்  நிறமூடிகள், சுவையூட்டிகள், இரசாயனங்கள் என பதப்படுத்தி பருகுகிறோம். மேலும் இரசாயனப் பால் கலந்து தேநீரை புதிய திரவ உணவாக தயாரித்து பருகுகிறோம்.

இலையிருந்து தேநீர் தயாரிப்பது தவிர மற்ற எல்லா தயாரிப்பு முறையும் நம்மவரின் கண்டுபிடிப்பே. இந்த புதுப்புது வடிவ பானம் கண்டுபிடிப்பின் விளைவாக பருகுபவரின் உடல் படாதபாடு படுகிறது. 

ஆகா இந்த புதிய டீ, காபியை பருகுவதால் ஏற்படும் தொந்தரவுகள் பலருக்கு தெரிந்திருந்தாலும் அதற்கு மாற்றாக எதை, ஏன், எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லை.

மூலிகை பானம்

பல்லாயிரம் ஆண்டுகளாக சீனாவில் பசுந்தேநீர் பருகுவதைப்போல் நம் தமிழகத்திலும் மூலிகை தேனீர், சுக்கு காபி, கருப்பட்டி காபி, திரிகடுகம் தேனீர் போன்றவற்றை பயன்படுத்தினர். எந்த பின்விளைவுகளும் இன்றி உடல் ஆரோக்கியத்திற்காகவும் உடல் புத்துணர்வுடன் செயல்படவும் நம் தட்ப்பவெப்பத்திற்கு ஏற்றவாறு நம் மூலிகை தேநீர் வகைகள் உள்ளன.   

நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானமும், மாலையில் சுக்கு, மல்லி, மிளகு கலந்த மூலிகை பானமும், இரவு வேளைகளில் கடுக்காய் கசாயமும் பருகினர். இது நம் நாட்டின் வெப்ப சூழலுக்கு ஏற்றவாறு இருந்ததோடு முதுமையிலும் இளமையாக வாழச் செய்தது.  

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக ஏற்ற மூலிகை பானம் இது. செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாய்வு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, நீரழிவு நோய், நெஞ்சுவலி, இருதய நோய், மூட்டு வலி, வயிற்று பொருமல், சோம்பல் போன்றவற்றிற்கு சிறந்த திரவ உணவு மற்றும் மாமருந்து. அற்புத முதலுதவி மருந்தும் கூட.

இத்தகைய சிறப்பம்சங்கள் உள்ள நமது பாரம்பரிய பானத்தை தயாரிக்கும் முறை நமக்கெல்லாம் மறந்தே போனது. எளிமையாகவும் சுவையாகவும் தரமாகவும் ஆரோக்கியத்தை அளிக்கின்ற பனங்கள் ஏராளம். உதாரணத்திற்கு பசுந்தேநீர், மூலிகை தேநீர், சுக்கு மல்லி காபி.

பல நன்மைகளையும் புத்துணர்வுடன் கொடுக்கும் எளிய மூலிகை தேநீர், மூலிகை காபிகளை தொடர்ந்து பயன்படுத்த எல்லா வியாதிகளும் இருந்த இதன் தெரியாமல் ஓடிவிடும். 

எந்த உபாதைகளும் இன்றி உடலின் ஜீரண சக்தியை அதிகரித்து, சீராக செல்களை புதுப்பித்து என்றும் இளமையுடனும் உற்சாகத்துடனும் பேணிப் பாதுகாக்கும் நம் நாட்டு மூலிகை தேநீர், மூலிகை காபியை பயன்படுத்தி இன்புருவோம். இனி ஒன்று இரண்டு ஐந்து என கணக்கு வைத்து எதையோ குடிப்பதை நிறுத்தி நமது மூலிகை அமிர்தத்தை பருகுவோம்.