benefits-of-donation-tamil dhaanam

தானம் – அவற்றின் பலன்கள்

யாரும் எதையும் எடுத்துக் கொண்டு வரவும் இல்லை, எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதும் இல்லை. இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை இவை ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமானவை. இவற்றை மிஞ்சி இருக்கும் ஒவ்வொரு பொருளும் அனைவருக்குமானது. இவ்வாறு நமக்குப் போக பிறருக்கு உதவும் வகையில் நம் முன்னோர் கொண்டு வந்த சம்பிரதாயம் தான் தானம்.

benefits-of-donation-tamil dhaanam

எதையும் நடைமுறைப்படுத்த நமது முன்னோர்கள் சாஸ்திரம், சம்பிரதாயம், வழிமுறை, நல்லது என ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு ஏற்ப கூறி சென்றனர். அந்த வகையில் இந்த பொருளை தானம் செய்தால் எந்த நன்மை ஏற்படும், இந்த பிரச்சனைகள் நீங்கும் என சில குறிப்புகளையும், நன்மைகளையும் கூறியுள்ளனர். அவற்றை இனி பார்ப்போம்.

தானம்பலன்
அன்னதானம்தரித்திரமும், கடனும் நீங்கும்
வஸ்திர தானம்ஆயுளை விருத்தி செய்யும்
தேன் தானம்புத்திர பாக்கியம் உண்டாகும்
நெல்லிக்கனி தானம்ஞானம் உண்டாகும்
தீப தானம்கண் பார்வை தீர்க்கமாகும்
அரிசி தானம்பாவங்களைப் போக்கும்
நெய் தானம்நோய் தீர்க்கும்
பால் தானம்துக்கம் நீங்கும்
தயிர் தானம்இந்திரிய விருத்தி
பழங்கள் தானம்புத்தியும், சித்தியும் கிட்டும்
தங்க தானம்குடும்ப தோஷங்கள் நீங்கும்
வெள்ளி தானம்மனக்கவலை நீங்கும்
கோ தானம்ரிஷி கடன், தேவ கடன், பித்ரு கடன் அகலும்
தேங்காய் தானம்நினைத்த காரியம் வெற்றியாகும்
பூமி தானம்பிரம்ம லோகத்தையும். ஈஸ்வர தரிசனத்தையும் நல்கும்