இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் அவ்வப்பொழுது அதாவது வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பீட்ரூட்டை ஜூஸ் செய்து அல்லது பீட்ரூட்டை இவ்வாறு ஊறுகாய் செய்து உண்பது சிறந்தது. இரத்த சோகை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும், அந்தளவு சத்துக்களும் தன்மையும் கொண்டது இந்த ஊறுகாய். மேலும் மிக எளிதாக இதனைத் தயாரிக்க முடியும்.
பொதுவாக ஊறுகாய் என்றதும் பலருக்கும் அது தீய உணவு எனத் தெரியும் ஆனால் இது அப்படியில்லை, இயற்கை பீட்ரூட் ஊறுகாய். தீமை விளைவிக்கும் உப்பு, எண்ணெயில் ஊறும் ஊறுகாய் அல்ல இது. சமைக்காமல், அடுப்பில்லாமல் இயற்கையாக செய்யும் ஊறுகாய். இயற்கை உணவு அல்லது அடுப்பில்லா சமையல். மேலும் இதனைச் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தயாரித்துக் கொள்ளலாம்.
இரும்பு சத்துள்ள உணவுகள் நமது உடலால் உட்கிரகிக்க பட அதற்கு கட்டாயம் வைட்டமின் சி சத்துள்ள துணை உணவுகள் தேவை. இவை இரண்டும் இருந்தால் மட்டுமே இரும்பு சத்து நமது உடலில் சத்தாக மாறும். இவ்வாறு உண்டால் மட்டுமே இரத்த சோகை மறையும். இல்லையானால் அவை சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் மலமாக வெளியேறும். இரத்த சோகையும் தீராது. அதனால் இந்த பீட்ரூட் ஊறுகாய் இரத்த சோகையைப் போக்கும் மிகச்சிறந்த உணவு, மேலும் நல்ல சுவையான உணவு. குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ஒருமுறை தயாரித்து உண்டு பாருங்கள் மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும்.
தேவையான பொருட்கள்
- 1 பீட்ரூட்
- 1/4 ஸ்பூன் இஞ்சி சாறு
- 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- இந்துப்பு / கல் உப்பு
செய்முறை
- பீட்ரூட்டை முதலில் நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தேவைப்பட்டால் சிறிது நேரம் உப்பு நீரில் ஊற வைத்துக் கொண்டு எடுத்துக் கொள்ளலாம்.
- பின் அதனை நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.
- பிறகு பீட்ரூட் தோல் நீக்கிக் கொண்டு அதனை பொடிப் பொடியாக நறுக்கவும்.
- அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, இந்துப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அவ்வளவு தான் சுவையான சத்தான இயற்கை பீட்ரூட் ஊறுகாய் தயார்.
- இதனை காலை அல்லது மதிய வேளையில் உண்பது சிறந்தது.
பீட்ரூட் ஊறுகாய் – இயற்கை உணவு / அடுப்பில்லா சமையல்
தேவையான பொருட்கள்
- 1 பீட்ரூட்
- 1/4 ஸ்பூன் இஞ்சி சாறு
- 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- இந்துப்பு / கல் உப்பு
செய்முறை
- பீட்ரூட்டை முதலில் நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தேவைப்பட்டால் சிறிதுநேரம் உப்பு நீரில் ஊறவைத்துக் கொண்டு எடுத்துக் கொள்ளலாம்.
- பின் அதனை நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.
- பிறகு பீட்ரூட் தோல் நீக்கிக்கொண்டு அதனை பொடிப் பொடியாக நறுக்கவும்.
- அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, இந்துப்பு சேர்த்து நன்று கலக்கவும்.
- அவ்வளவு தான் சுவையான சத்தான இயற்கை பீட்ரூட் ஊறுகாய் தயார்.
- இதனை காலை அல்லது மதிய வேளையில் உண்பது சிறந்தது.