பீட்ரூட் ஜாம்

ரத்த சோகையை போக்கும் சுவையான சத்தான ஜாம். நரம்பு தளர்ச்சியை போக்கி நல்ல சுறுசுறுப்பைத் தரும். குழந்தைகளுக்கு பல பல இரசாயனங்கள் கலந்த செயற்கை ஜாம்களை சந்தையிலிருந்து பெறுவதை தவிர்த்து இயற்கையான முறையில் பீட்ரூட் ஜாம் வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்க ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் மற்றும் பல வைட்டமின் சத்துகளையும் கொண்டது இந்த ஜாம். இயற்கையான முறையில் தயாரிப்பதால் இதனை குழந்தைகள் விரும்பும் அளவு உட்கொண்டாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. உடலுக்கு ஊட்டத்தையும், வலிமையையும் அளிக்கும்.

தேவையான பொருட்கள்

  • 2 பீட்ரூட்
  • 5 கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்
  • தேவைக்கேற்ப தேன்

செய்முறை

  • பேரீச்சம்பழத்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ள வேண்டும்.
  • தேவைக்கேற்ப கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேரிச்சம்பழம், பீட்ரூட் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.

  • இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேன் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
  • தேவையெனின் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • அவ்வளவு தான் குழந்தைகள் பெரியவர்கள் விரும்பும் ஆரோக்கியமான இயற்கை ஜாம் தயார்.

பீட்ரூட் ஜாம்

ரத்த சோகையை போக்கும் சுவையான சத்தான ஜாம். நரம்பு தளர்ச்சியை போக்கி நல்ல சுறுசுறுப்பைத் தரும். குழந்தைகளுக்கு பல பல இரசாயனங்கள் கலந்த செயற்கை ஜாம்களை சந்தையிலிருந்து பெறுவதை தவிர்த்து இயற்கையான முறையில் பீட்ரூட் ஜாம் வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்க ஆரோக்கியம் மேம்படும்.
ஆயத்த நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 30 minutes