உடலுக்கு தேவையான பல சத்துக்களை மட்டுமில்லாமல் இரத்த உற்பத்திக்கும் பெருமளவில் உதவும் ஒரு காய் பீட்ரூட். இதனைக் கொண்டு இன்று சந்தை பல மதிப்புக் கூட்டிய பொருட்கள் வந்தாலும் அவற்றில் முதலிடத்தில் இருப்பது பீட்ரூட் பொடி. மால்ட் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.
வீட்டிலேயே மிக எளிதாக சந்தையில் கிடைக்கும் பீட்ரூட்டைக் கொண்டு பீட்ரூட் பொடி தயாரித்து வைத்துக் கொண்டு அன்றாடம் உணவுகளிலும், ஜூஸ், சர்பத் போன்றவற்றிலும் பயன்படுத்த உடல் ஆரோக்கியம் பெருகும், மலிவான விலையிலும் பெறலாம்.
பீட்ரூட் பொடி / பீட்ரூட் மால்ட் தயாரிக்க
முதலில் நன்கு சுத்தம் செய்த பீட்ரூட்டை சிறிது நேரம் மஞ்சள் உப்பு நீரில் ஊறவைத்து கழுவி அப்படியே அவிக்க வேண்டும். தேவைபட்டால் ஒன்றிரண்டாக நறுக்கி அவித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஆறியபின் துருவிக் கொண்டோ அல்லது சிறிதாக நறுக்கியோ நன்கு உலர்த்த வேண்டும்.
நன்கு காய்ந்த பின் அவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும். அவ்வளவு தான் பீட்ரூட் பொடி / பீட்ரூட் மால்ட் தயார். இதனை கொண்டு பல உணவுகளை தயாரிக்கலாம் அல்லது சத்தான பானம் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.