bay-leaf-benefits-tamil

பிரியாணி இலை / இலவங்கப் பத்திரி பயன்கள்

இலவங்கப் பத்திரி என்றால் பலருக்கும் தெரியாது, பிரியாணிக்கு அதிகம் பயன்படுத்துவதால் பிரியாணி இலை என்றே இதனை கூறிப் பழகிவிட்டோம். வடஇந்தியா, இமய மலைகளில் விளையும் லவங்கப்பட்டை செடியின் இலைக்கு லவங்கபத்திரி என்று பெயர். தாளிசப் பத்திரி, தமால பத்திரி என்றும் இதற்கு பெயருண்டு. இந்த செடியின் இலையில் நறுமண எண்ணெய் உள்ளது. கார்ப்பு சுவைக் கொண்ட இந்த செடிகளின் இலைகளே பயன்படும் பகுதிகள்.

bay-leaf-benefits-tamil

இலவங்கப் பத்திரி நன்மைகள்

நறுமணத்திற்காக உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்த இலவங்கப் பத்திரி இலைகள் சில மருத்துவ குணங்கங்களையும் கொண்டுள்ளது. உடலில் ஏற்படும் வியர்வையைப் பெருக்கி, வீக்கங்களை நீக்கி, உடலுக்கு வெப்பத்தை அதிகரிக்கக் கூடிய, அதாவது உடலுக்கு உஷ்ணத்தை அளிக்கும் தன்மையையும் கொண்டது. இந்த இலையில் உள்ள நறுமணப் பொருட்கள் கொசுக்கள் போன்ற பூச்சிகளை விரட்டும் தன்மையும் கொண்டது.

பரவலாக மசாலாக்கள் கலந்த உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்த இலவங்கப் பத்திரி என்ற பிரியாணி இலை அஜீரணத்தைப் போக்க்கும் ஆற்றலும் பசியைத் தூண்டும் ஆற்றலும் கொண்டது. மேலும் வாய்ப்புண், வெட்டை, இரைப்பு, இருமல், சுரம், பித்தம் இவற்றைப் போக்கும் தன்மையும் கொண்டது.

இந்த இலவங்கப்பத்திரி இலையை ஊறவைத்து சாறு எடுத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு காலை, மாலை எடுத்து வர குளிர்சுரம், வெள்ளை, இரைப்பு போன்ற தொந்தரவுகள் தீரும். இந்த இலையை குடிநீர் செய்தும் தினமும் மூன்று வேளை பருகிவர வாய்ப்புண், தாது நஷ்டம், பித்தம், வாந்தி, இருமல், இரைப்பு, அஜீரணம், ஜுரம் மறையும்.

(1 vote)