சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் இந்த குதிரைவாலி. உடலை சீராக வைக்க உதவும் இந்த தானியம் இரத்த சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
குதிரைவாலியில் உள்ள பாஸ்பரஸ் நமது உடலுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும் அது முக்கிய பங்காற்றுகிறது.
மேலும் இந்த குதிரைவாலியின் பயன்கள், நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரிந்துக்கொள்ள – குதிரைவாலி. For English Barnyard Millet Peas Pulao Recipe.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. பொதுவாக வளரும் குழந்தைகளுக்கு மிளகாய் காரத்தை குறைத்து பூண்டு, வெங்காயம், மிளகு ஆகியவற்றின் காரத்தை சேர்த்துக்கொள்வது சிறந்தது.
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி அரிசி
- 1/2 கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம்
- ¼ கப் வேகவைத்த பச்சை பட்டாணி
- சிறிது இடித்த பூண்டு
- சிறிது மிளகுத் தூள்
- சிறிது எலுமிச்சை சாறு
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
- குதிரைவாலி அரிசியை நன்கு களைந்து ஒரு 20 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை ஊற வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் இந்த குதிரைவாலி அரிசியையும் சேர்த்து வேக விட வேண்டும்.
- குதிரைவாலி அரிசி கிட்டத்தட்ட ஒரு 5 முதல் 7 நிமிடத்தில் நன்கு வெந்து தயாராகியிருக்கும்.
- வெந்ததை சரிபார்த்து விட்டு மீதம் இருக்கும் தண்ணீரை வடித்துவிட வேண்டும்.
- இதில் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறி விட வேண்டும். குதிரைவாலி சோறு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.
- அவ்வளவுதான் குதிரைவாலி சாதம் தயாராகிவிட்டது.
- ஒரு அகலமான, கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சிறிது இடித்த பூண்டை சேர்த்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் வேகவைத்த பட்டாணியை சேர்த்து வதக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து குதிரைவாலி சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- இவற்றை ஒரு 5 நிமிடம் செய்து நன்கு தம் போட்டு மூடி வைக்க வேண்டும்.
- ஐந்து நிமிடம் கழித்து எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான குதிரைவாலி பீஸ் புலாவ் தயார்.
- குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
குதிரைவாலி பீஸ் புலாவ்

- அவ்வளவுதான் குதிரைவாலி சாதம் தயாராகிவிட்டது