தமிழகமெங்கும் பார்க்கக் கூடிய மரம் ஆலமரம். சென்னையில் அடையார் ஆலமரம் தனிச்சிறப்புடையது. நானூறு ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக அடையாரில் இந்த மரம் உள்ளது. அகன்று விரிந்து கம்பீரமாக நிற்கும் ஆலமரம் மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. நிழல் தரும் மரமாகத் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.
சாறு பால் வடிவமாக இருக்கும். இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது என அனைத்துமே மருத்துவ பயனுடையவை. விழுது பட்டை இலை ஆகியவை உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயல்படுகிறது
Banyan tree
Botanical Name: Ficus bengalensis
English Name : Banyan tree
Hindi Name : Bargad, Bat, Vad
Sanskrit Name :Nyagrodhah
Tamil Name : Alamaram
Latin Name : Ficus Benghalensis
Malayalam Name :Peral
Telugu Name: Pedda-marri
Kannada Name: Ala
Marathi Name : Vata
Bengla Name : Vatagach
ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் சேர்த்து போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கு (white discharge) தீரும்.
புளி, காரம் நீக்கி 20 துளி ஆழம் பாலை சர்க்கரையுடன் காலையில் சாப்பிட ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.
வாயில் ஏற்படும் ரணம், நாக்கு, உதடு ஆகியவற்றில் ஏற்படும் வெடிப்புகள், கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம், ஆகியவை ஆலமரத்து பாலை தடவிவர தீரும்.
இன்று அதிகமாக பலருக்கும் ஏற்படும் நீரிழிவு நோய்க்கு மிக சிறந்த மருந்தாக இந்த ஆலமரப்பட்டை உள்ளது. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவற்றை நன்கு பொடித்து தலா 100 கிராம் விகிதம் எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு லிட்டர் நீரினை சேர்த்து காய்ச்சி காலையில் மட்டும் ஒரு குவளை குடித்துவரலாம். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதனை தயார் செய்துகொண்டு பருகலாம். இவ்வாறு ஒரு மண்டலம் சாப்பிட நீரிழிவு (மதுமேகம்) கட்டுப்படும்.
ஆண்மை குறைபாடு, விந்தணுக்கள் குறைபாட்டிற்கு மிக சிறந்த மருந்தாக ஆலம் பழம் உள்ளது. ஆழம் பழம், விழுது, கொழுந்து ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும்வயிற்றில் நான்கு மாதம் சாப்பிட விந்தணுக்கள் உற்பத்தியாகும்.
ஆலமர விழுது துளிரையும், விதையையும் அரைத்து காலையில் பசும்பாலுடன் ஐந்து கிராம் சேர்த்து கலந்து பருக தாய்ப்பால் பெருகும்.
துளிர் இலைகளை அரைத்து தயிரில் ஐந்து கிராம் அளவு கலந்து கொடுக்க இரத்த பேதி நிற்கும்.
ஆழம் விழுதைக் கொண்டு பல் தேய்த்து வர பற்கள் உறுதியாகும். இதனுடன் நாயுருவி, கல்லுப்பு சேர்த்து அரைத்து பற்பொடியாகவும் தயாரித்து பற்களை துலக்கலாம்.
ஆலமர விழுது துளிரை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து சூரிய ஒளியில் ஒருவாரம் வைத்து பின் கூந்தலுக்கு அன்றாடம் பயன்படுத்த கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வு கட்டுப்படும்.